ஹன்சிகாவுக்கு புலி கொடுத்த நம்பிக்கை!

Bookmark and Share

ஹன்சிகாவுக்கு புலி கொடுத்த நம்பிக்கை!

ஹன்சிகா நடிப்பில் வாலு, ரோமியோ ஜூலியட், புலி, உயிரே உயிரே என பல படங்கள் இருந்தபோதிலும், இந்த படங்களில் புலியைத்தான் அவர் பெரிதாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்.

காரணம், ஏற்கனவே விஜய்யுடன் அவர் நடித்த வேலாயுதம் படத்தில் இன்னொரு நாயகியாக நடித்த ஜெனிலியாவுக்கே கதையில் முக்கியத்துவம் கொடுத்தது போன்று இந்த புலியில் இன்னொரு நாயகியாக இருக்கும் ஸ்ருதிஹாசனுக்கு கதையில் முக்கியத்தும் கொடுத்திருப்பதாகத்தான் இவ்வளவு நாளும் ஹன்சிகா நினைத்திருந்தாராம்.

ஆனால் தனது கேரக்டர் பற்றி செல்லும் டைரக்டரிடம் ஸ்ருதிஹாசனின் கேரக்டரை கேட்டால் தவறாக நினைப்பார்கள் என்பதால் இதுவரை கேட்காமலேயே இருந்து விட்டாராம். ஆனபோதும் அப்படத்தில் பணியாற்றியுள்ள சில உதவி இயக்குனர்களிடம் பேச்சுக்கொடுத்து தனது கேரக்டர் கதைக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை இப்போது தெரிந்து கொண்டுள்ளாராம் ஹன்சிகா.

அதனால் இதுவரை திக் திக் மனநிலையுடன் காணப்பட்டவர் இப்போது யாராவது புலி படம் பற்றி கேட்டால், இந்த படம் எனக்கு மேலும் பல பெரிய படங்கள் கிடைப்பதற்கு வழி செய்யும் என்று அடித்து சொல்கிறாராம் ஹன்சிகா. 

 

 

 


Post your comment





Related News
கமல் கட்சியில் சேர ஆர்வம் இருக்கிறது - ஷகிலா
இந்தியன் 2 படத்தின் 2 நிமிட காட்சிக்கு எத்தனை கோடியில் செட் தெரியுமா?
சினிமாவுக்கு முழுக்கு: ‘தேவர் மகன்-2’ படத்தில் கமலுக்கு பதில் வேறு கதாநாயகன்?
அடுத்த வாரம் துவங்கும் இந்தியன் 2 படப்பிடிப்பு - நாயகியாக காஜல் அகர்வால்
அக்‌ஷராஹாசனின் அந்தரங்க படங்கள் வெளியீடு - வழக்கு விசாரணை தீவிரம்
2.0 டிரைலர் ரிலீஸ் - ரஜினிக்கு கமல் வாழ்த்து
அடுத்து தேவர் மகன் 2 - உறுதி செய்த கமல்
விதியை எதிர்த்து நின்றவர் கமல் - சுருதிஹாசன் பேச்சு
கமல் வழியை பின்பற்றும் ஸ்ருதிஹாசன்
கமல் ரசிகன் என்ற முறையில் அவர் மீது வருத்தம் - படவிழாவில் சுரேஷ் காமாட்சி பேச்சு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions