விசாரணை படத்துக்கு 3 தேசிய விருதுகள் கிடைத்தது மும்மடங்கு மகிழ்ச்சி : தனுஷ்

Bookmark and Share

விசாரணை படத்துக்கு 3 தேசிய விருதுகள் கிடைத்தது மும்மடங்கு மகிழ்ச்சி : தனுஷ்

வெற்றிமாறன் இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த ‘விசாரணை’ படம் பல்வேறு விருதுகளை வாங்கிக் குவித்திருந்தாலும், தற்போது இந்தியாவின் உயரிய விருதான தேசிய விருதையும் வாங்கியுள்ளது. இந்த படத்துக்கு மொத்தம் 3 தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இப்படத்தை வெற்றிமாறனும், நடிகர் தனுஷும் இணைந்து தயாரித்திருந்தனர். 

‘விசாரணை ’படத்துக்கு 3 தேசிய விருதுகள் கிடைத்தது குறித்து தனுஷ் மகிழ்ச்சியுடன் கூறும்போது, சில படைப்புகளை துவங்கும்போது நமக்கே தெரியும், இப்படைப்பு  மிக முக்கிய இடத்தை பெறும் என்பது. அதைப்போன்ற ஒரு படைப்பு தான் இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்து விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றிபெற்ற ‘விசாரணை’. 

நான் ‘விசாரணை’ திரைப்படத்துக்காக தேசிய விருது பெற்றுள்ள சமுத்திரகனி மற்றும் படத்தொகுப்பாளர் கிஷோருக்காக மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். ‘விசாரணை’ படத்துக்கு 3 விருதுகள் என்பது எனக்கு 3 மடங்கு மகிழ்ச்சியான விஷயமாகும். 

மூன்று தேசிய விருதுகளை தந்துள்ள இயக்குநர் வெற்றிமாறனுக்கு நன்றி கூறுவது எனது கடமையாகும். இதைப்போன்ற படைப்புகளை தமிழ்  மக்கள் நிச்சயம் ஏற்றுகொள்வார்கள் என்ற விஷயம்  எனக்கு மகிழ்ச்சியையும், மேலும் இதைப்போன்ற படைப்பை வழங்க உற்சாகத்தையும் தருகின்றது என்றார்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions