’ஹரஹர மஹாதேவகி’யில் ஆபாச காமெடி இல்லை: கவுதம் கார்த்திக்

Bookmark and Share

’ஹரஹர மஹாதேவகி’யில் ஆபாச காமெடி இல்லை: கவுதம் கார்த்திக்

ப்ளூ கோஸ்ட் பிக்சர்ஸ் மற்றும் தங்கம் சினிமாஸ் இணைந்து தயாரித்திருக்கும் படம் 'ஹர ஹர மஹாதேவகி'. சந்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கத்தில் கவுதம் கார்த்திக், நிக்கி கல்ராணி, சதீஷ், பால சரவணன், ராஜேந்திரன், கருணாகரன், மனோபாலா, மயில்சாமி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

பாலமுரளி இசையமைத்துள்ள இப்படத்திற்கு செல்வகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் வெளியிடவுள்ளது. இப்படம் வரும் செப்டம்பர்-29ல் வெளியாகிறது. இப்படம் குறித்து கௌதம் கார்த்திக் கூறியிருப்பதாவது:

நான் ஹரஹர மஹாதேவகி படத்தின் கதையை கதையாக தான் பார்த்தேன். இது முழுமையான காமெடி என்டர்டெய்னர். ஒரு இடத்தில் நான்கு நண்பர்கள் கூடினால் அவர்களுக்குள் எப்படி பேசிக்கொள்வார்களோ அதே போல் தான் இப்படத்தில் காட்சிகள் இருக்கும்.

இந்த படத்தை ஏன் குடும்பத்தோடு பார்க்ககூடாது என்று சொல்கிறோம் என்றால் , நாம் நம் நண்பர்களோடு பகிர்ந்துகொள்ளும் சில விஷயத்தை குடும்பத்தினர் முன்பு கண்டிப்பாக பேசமாட்டோம்... அதனால் தான் இந்த படத்தை அடல்ட்ஸ் ஒன்லி படம் என்று சொல்கிறோம். 

நான் ஹரஹர மஹாதேவகியையும் , இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படத்தையும் யூத் ஆடியன்ஸ் அனைவரையும் மனதில் வைத்து தான் தேர்ந்தெடுத்து நடித்துள்ளேன்.

இந்த இரண்டு படங்களில் நடிப்பது கண்டிப்பாக ஸ்டீரியோ டைப் ஆகாது என்று எனக்கு நம்பிக்கை உள்ளது. நான் நிறைய கதைகளில் நடித்துள்ளேன் அதை போல் தான் இந்த படமும். படத்தின் கதையை கேட்டு அப்பா சிரித்தார்.

இந்த படம் அடல்ட் காமெடி தான் , செக்ஸ்வல் காமெடி இல்லை. இங்கே யாருக்கும் அடல்ட் காமெடி பற்றிய சரியான புரிதல் இல்லை. ஹரஹர மஹாதேவகி இளைஞர்கள் ரசிக்கும் படமாக இருக்கும் என்றார். இவ்வாறு கௌதம் கார்த்திக் தெரிவித்துள்ளார்.

 


Post your comment





Related News
என் வேலையை எளிதாக்கியது அவர்கள்தான் - பாடலாசிரியர் யுகபாரதி
கமல் அழகாக இருந்ததால் தான் சப்பாணியாக நடிக்க வைத்தேன் - பாரதிராஜா
ரூ.50 லட்சத்தை விட்டுக்கொடுத்த நயன்தாரா
கோலமாவு கோகிலா இத்தனை கோடி வசூலா, செம்ம கெத்து நயன்தாரா
இயக்குனருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ரஜினி
கோலமாவு கோகிலாவில் யோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொள்கிறாரா நயன்தாரா..?
ரசிகர்களை சிரிக்க வைக்கும் வகையில் உருவாகியிருக்கும் "அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா"..!
ஆர்கானிக் உணவுப்பொருள்கள் சரியானது தானா..? ; பகீர் கிளப்பும் 'திசை' இயக்குனர்..!
மற்றவர்களுக்காக வாழ முடியாது - நயன்தாரா
வீரா நடிப்பில் வெளிவரவிருக்கும் "அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா"..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions