கேமராமேன்களை கல்யாண வீட்டில் தாக்கிய "பவுன்ஸர்"கள்.. மன்னிப்பு கேட்ட ஹர்பஜன் சிங்

Bookmark and Share

கேமராமேன்களை கல்யாண வீட்டில் தாக்கிய

இந்திய கிரிக்கெட் அணியின் சுழற் பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் திருமணத்தின் போது, கேமராமேன் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு அவர் மன்னிப்பு கேட்டுக் கொண்டார்.

சுழற் பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங்குக்கும் (35), அவரது நீண்டகால தோழியும், பாலிவுட் நடிகையுமான கீதா பாஸ்ராவுக்கும் பஞ்சாப் மாநிலம் பக்வாரா நகரில் ஜலந்தரிலுள்ள சீக்கியர்களின் புனித தலமான குருத்வாராவில் நேற்று இருவருக்கும் திருமணம் நடைபெற்றது.

திருமண விழாவுக்கு சச்சின் டெண்டுல்கர், மனைவி அஞ்சலியுடன் வருகை தந்து வாழ்த்தினார். திருமண விழாவில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டும் கலந்து கொண்டனர். திருமணத்தின் போது, வீட்டுக்கு வெளியே நடந்த வைபவத்தை அங்கு குழுமியிருந்த சில புகைப்பட நிருபர்கள் தங்கள் கேமராவில் பதிவு செய்தனர்.

இதைப் பார்த்த அங்கிருந்த பவுன்சர்கள் சிலர் அவர்களை தாக்கியுள்ளனர். நிருபர்களின் கேமராவையும் வலுகட்டாயமாக வாங்கிக் வைத்துக் கொண்டனர். இதனால் ஆத்திரமடைந்த செய்தியாளர்கள் உடனடியாக அந்த இடத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதைக் கேள்விப்பட்டு திருமண நிகழ்ச்சியின் இடையே வெளியே வந்த ஹர்பஜன் சிங் செய்தியாளர்களிடம் மன்னிப்பு கேட்டார். இதையடுத்து அவர்களின் தர்ணா முடிவுக்கு வந்தது.

இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Post your comment





Related News
ரன்வீர் சிங் - தீபிகா படுகோனே திருமண ஏற்பாடுகள் தீவிரம்
"எம். ஜி. ஆர்" திரைப்படத்தின் 'டீஸர்' வெளியீடு
ஸ்ரீரெட்டி சர்ச்சைக்கு பதிலளித்த நடிகை காஜல்! என்ன சொன்னார் பாருங்கள்..
விஜய்யின் மெர்சல் செய்த பிரம்மாண்ட சாதனை! அதிகாரப்பூர்வ அறிவிப்பு
கோ, அஞ்சான் பட நடிகைக்கு ரோட்டில் நடந்த பரிதாப சம்பவம்!
பிரபல நடிகரின் படத்தில் ஐட்டம் பாடலுக்கு நடனமாடும் ரகுல் பிரீத் சிங்!
சினிமாவில் நிலைத்து நிற்க ரகுல் ப்ரீத் சிங் சொல்லும் யோசனை
சூர்யாவுடன் இணைந்த ரகுல் ப்ரீத் சிங்
கல்யாணதுக்கு ஓகே தான், ஆனால் அதை மட்டும் செய்ய மாட்டேன் - ஓபனாக பேசிய முன்னணி நடிகை.!
விருது விழாவில் ஸ்ரீதேவிக்கு உருக்கமாக அஞ்சலி செலுத்திய முன்னணி ஹீரோ








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions