விக்ரமிற்காக சாமி-2 கதையை ரெடி பண்ணிய ஹரி!

Bookmark and Share

விக்ரமிற்காக சாமி-2 கதையை ரெடி பண்ணிய ஹரி!

1990ல் என் காதல் கண்மணி என்ற படத்தில் நடிகராக அறிமுகமானவர் விக்ரம். அதையடுத்து தந்து விட்டேன் என்னை, காவல் கீதம், மீரா, புதிய மன்னர்கள் போன்ற படங்களில் நடித்தார். என்றபோதும் அவருக்கு எதிர்பார்த்தபடி தமிழில் திருப்புமுனை அமையவில்லை.

அதனால் பின்னர், மலையாளம், தெலுங்கு படங்களில் நடித்து வந்தார். அந்த வகையில், சுமார் 25 படங்களில் நடித்த பிறகு பாலா இயக்கத்தில் நடித்த சேது படம்தான் விக்ரமுக்கு பெரிய திருப்பத்தை கொடுத்தது.  

அதன்பிறகு தில், காசி, தூள், ஜெமினி என ஹிட் படங்களில் நடித்துவந்தபோது சாமி படத்தில் அவர் நடித்த போலீஸ் ரோல் அவரை சூப்பர் ஹீரோவாக்கியது. அதோடு விக்ரமின் கமர்சியல் வேல்யூவும் அந்த படத்திலிருந்து கிடுகிடுவென உயர்ந்தது. அதையடுத்து ஷங்கரின் அந்நியன், ஐ படங்களில் நடித்து இப்போது பிரமாண்ட நடிகராகியிருக்கிறார் விக்ரம்.

இந்த நிலையில், அவரை வைத்து சாமி படத்தை இயக்கிய ஹரி, மீண்டும் விக்ரமை இயக்கப்போகிறாராம். அவர் நடிக்க வேண்டிய சாமி-2 படத்துக்கான கதைகூட தயாராகி விட்டதாம். தற்போது பத்து எண்றதுக்குள்ள படத்தை முடித்து விட்ட விக்ரம், அதைத் தொடர்ந்து மர்மமனிதன், துருவ நட்சத்திரம் படங்களை முடித்ததும் இந்த படத்தில் நடிப்பார் என்று கூறப்படுகிறது.


Post your comment





Related News
பிரபல நடிகர் ஹரி கிருஷ்ணா கார் விபத்தில் மரணம்
புதிரான இயக்குனர் படத்தில் ஹரிஷ் கல்யாண்
ஹரிஷ் கல்யாணின் அடுத்த படம், இயக்க போவது யார் தெரியுமா?
ரசிகர்களை சிரிக்க வைக்கும் வகையில் உருவாகியிருக்கும் "அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா"..!
வீரா நடிப்பில் வெளிவரவிருக்கும் "அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா"..!
பாக்ஸ் ஆபீஸை துளைக்கும் மன்மதனின் அம்பு!
பிக்பாஸ் ஷாரிக்கிற்கு மலேசிய ரசிகை செய்த விஷயம்- அவரே ஷாக் ஆகிட்டாராம்
பியார் பிரேம காதல் கதை என்ன? - ஹரிஷ் கல்யாண் ஓபன் டாக்.!
என்னை கலாய்ச்சதுக்கு நன்றி,சூப்பர்ஸ்டார் ஆவேன்! - பிக்பாஸ் ஷரீக்
பாத்ரூம் டூயட் இனி இல்லை! யாஷிகாவுக்கு ஷாரிக் கொடுத்துவிட்டு சென்ற கிப்ட்..








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions