ஹரியின் சினிமா செண்டிமென்ட்!

Bookmark and Share

ஹரியின் சினிமா செண்டிமென்ட்!

டைரக்டர் ஹரி இயக்கும் படங்கள் என்றாலே நெல்லை மண்வாசனை வீசும். அப்படி அவர் இயக்கிய சாமி, கோவில் ஐயா, தாமிரபரணி, சிங்கம், வேங்கை, சிங்கம் என எல்லா படங்களின் படப்பிடிப்பும் தூத்துக்குடி பகுதியில்தான் பெருவாரியாக நடத்தினார். அதன்பிறகே சிட்டி லொகேசனுக்கு வந்தார்.

காரணம், அந்த ஏரியாவில் படப்பிடிப்பு நடத்திய அவர் படங்கள் எல்லாமே ஹிட்டடித்திருக்கின்றன. அதனால் தனது ஊர் செண்டிமென்ட்டை அடுத்தபடியாக தான் இயக்கும் சிங்கம்-3 படத்திலும் தொடர்கிறார் ஹரி. அதனால் சில நாட்கள் அங்கு நடத்தி விட்டே வெளிநாடுகளில் படப்பிடிப்பை தொடரப்போகிறாராம்.

தமிழ்சினிமாவைப் பொறுத்தவரை இதுவரை பில்லா-2, விஸ்வரூபம்-2, காஞ்சனா-2 உள்ளிட்ட சில படங்கள்தான் இரண்டாவது பாகம் உருவாகியிருக்கிறது. ஆனால் இந்த சிங்கம் படம் 2வது பாகத்தைத் தொடர்ந்து இப்போது 3வது பாகமும் வளர்கிறது. அந்த வகையில், தமிழ் சினிமாவில் முதன்முறையாக மூன்றாம் பாகம் இயக்கும் டைரக்டராகியிருக்கிறார் ஹரி.

அதேசமயம், ஏற்கனவே இரண்டு பாகங்கள் எடுத்து விட்ட நிலையில், மூன்றாம் பாகத்தில் பழைய சாயல் எதுவுமே இருக்கக்கூடாது என்பதற்காக திரைக் கதையை தொடர்ந்து திருத்தம் செய்து கொண்டே வரும் ஹரி, இந்த பாகத்தில் அனுஷ்கா, சூர்யாவின் மனைவியாகவே நடிக்க, ஸ்ருதிஹாசனை ஒரு முக்கியத்துவம் வாய்ந்த ஆக்சன் கேரக்டரில் நடிக்க வைக்கிறாராம். தனது பூஜை படத்தில் அவர் கொடுத்த பர்பாமென்ஸை பார்த்த பிறகுதான் அவரை இந்த ரோலில் நடிக்க வேண்டும் யோசனையே ஹரிக்கு ஏற்பட்டதாம்.


Post your comment





Related News
அர்ஜுன் மீதான புகாரால் ஸ்ருதியின் ரகசியம் வெளியானது
பாலியல் புகார் கூறிய நடிகைக்கு எதிராக ரூ.5 கோடி கேட்டு அர்ஜூன் வழக்கு
நடிகர் அர்ஜூனுக்கு தெலுங்கு நடிகை சோனி செரிஸ்டா ஆதரவு!
விளம்பரத்துக்காக பொய் சொல்கிறார் - நடிகை சுருதிஹரிகரனுக்கு அர்ஜுன் மகள் கண்டனம்
பிரபல நடிகர் ஹரி கிருஷ்ணா கார் விபத்தில் மரணம்
புதிரான இயக்குனர் படத்தில் ஹரிஷ் கல்யாண்
ஹரிஷ் கல்யாணின் அடுத்த படம், இயக்க போவது யார் தெரியுமா?
ரசிகர்களை சிரிக்க வைக்கும் வகையில் உருவாகியிருக்கும் "அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா"..!
வீரா நடிப்பில் வெளிவரவிருக்கும் "அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா"..!
பாக்ஸ் ஆபீஸை துளைக்கும் மன்மதனின் அம்பு!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions