போலி டுவிட்டர் கணக்கு : இயக்குநர் ஹரி புகார்

Bookmark and Share

போலி டுவிட்டர் கணக்கு : இயக்குநர் ஹரி புகார்

தன் பெயரில் உலவி வரும் போலி டுவிட்டர் அக்கவுண்ட்டால், விஷமிகள் சிலர் தன் மீது வெறுப்பு ஏற்படும் வண்ணம் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு, இயக்குநர் ஹரி, சென்னை போலீஸ் கமிஷனருக்கு, புகார் மனு அளித்துள்ளார்.

இதுகுறித்து, இயக்குநர் ஹரி, போலீஸ் கமிஷனருக்கு அளித்துள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது, நான் ஜி. ஹரிகிருஷ்ணன். தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குநராக உள்ளேன். ஹரி என்ற பெயரில் படங்களை இயக்கி வருகிறேன்.

@DirHariOfficial என்ற பெயரில் நடைமுறையில் உள்ள டுவிட்டர் அக்கவுண்ட் எனது அக்கவுண்ட் அல்ல. அது எனது பெயரில் உள்ள போலி டுவிட்டர் அக்கவுண்ட். அந்த டுவிட்டர் அக்கவுண்ட் மூலம், எனது திரையுலக வாழ்க்கைக்கும், குடும்ப வாழ்க்கையிலும் கெட்ட பெயர் ஏற்படும் வண்ணம், சிலர் கருத்துகளை பரவி வருகின்றனர்.

அவர்கள் மீது தாங்கள் நடவடிக்கை எடுக்கும்பொருட்டு, அவர்கள் வெளியிட்டுள்ள சில கருத்துகளையும் இத்துடன் இணைத்துள்ளதாக, இயக்குநர் ஹரி, குறிப்பிட்டுள்ளார்.


Post your comment





Related News
பிரபல நடிகர் ஹரி கிருஷ்ணா கார் விபத்தில் மரணம்
புதிரான இயக்குனர் படத்தில் ஹரிஷ் கல்யாண்
ஹரிஷ் கல்யாணின் அடுத்த படம், இயக்க போவது யார் தெரியுமா?
ரசிகர்களை சிரிக்க வைக்கும் வகையில் உருவாகியிருக்கும் "அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா"..!
வீரா நடிப்பில் வெளிவரவிருக்கும் "அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா"..!
பாக்ஸ் ஆபீஸை துளைக்கும் மன்மதனின் அம்பு!
பிக்பாஸ் ஷாரிக்கிற்கு மலேசிய ரசிகை செய்த விஷயம்- அவரே ஷாக் ஆகிட்டாராம்
பியார் பிரேம காதல் கதை என்ன? - ஹரிஷ் கல்யாண் ஓபன் டாக்.!
என்னை கலாய்ச்சதுக்கு நன்றி,சூப்பர்ஸ்டார் ஆவேன்! - பிக்பாஸ் ஷரீக்
பாத்ரூம் டூயட் இனி இல்லை! யாஷிகாவுக்கு ஷாரிக் கொடுத்துவிட்டு சென்ற கிப்ட்..








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions