டைரக்டர் ஹரியின் சகோதரர் வி.ஏ.ஜி கார் வண்ணராஜாவுக்கு திரையுலகினர் அஞ்சலி

Bookmark and Share

டைரக்டர் ஹரியின் சகோதரர் வி.ஏ.ஜி கார் வண்ணராஜாவுக்கு திரையுலகினர் அஞ்சலி

தமிழ்சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான டைரக்டர் ஹரியின் சகோதரர் வி.ஏ.ஜி கார் வண்ணராஜா நேற்று அதிகாலை உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.

சிறிது காலம் உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் அவரது உடல்நிலை மோசமடையவே சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. என்றாலும் சிகிச்சை பலனின்று நேற்று அதிகாலை மருத்துவமனையில் காலமானார். வி.ஏ.ஜி கார் வண்ணராஜாவின் மறைவு செய்தி கேட்ட திரையுலகினர் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர்.

தூத்துக்குடியில் படப்பிடிப்பில் இருந்த நடிகர் சூர்யா வி.ஏ.ஜி கார் வண்ணராஜாவின் மறைவு செய்தி கேட்ட உடனே விமானத்தில் வந்து அவருடைய உடலுக்கு அஞ்சலி செலுத்தி விட்டு மீண்டும் படப்பிடிப்புக்கு சென்றார்.

மற்றும் இசையமைப்பாளர் ஹாரீஸ் ஜெயராஜ், தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கலைப்புலி எஸ்.தாணு, அன்பாலயா பிரபாகரன், எஸ்.ஏ.சந்திரசேகர், விக்ரம், ஜெயப்பிரகாஷ், விஜயகுமார், அருண் விஜய், ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா, ராக்கி ராஜேஷ், தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, தயாரிப்பாளர் மோகன் நடராஜன், புஷ்பா கந்தசாமி ஆகிய திரையுலக பிரபலங்களும்,  இயக்குனர்கள் சங்கம், மற்றும் நடிகர் சங்க நிர்வாகிகளும் வணிகர் சங்கத்தலைவர் விக்கிரமராஜா, வியாபாரிகள் சங்கத் தலைவர் தா.வெள்ளையன், இந்துமகா சபைத் தலைவர் குமார்ஜி ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர்.


Post your comment





Related News
அர்ஜுன் மீதான புகாரால் ஸ்ருதியின் ரகசியம் வெளியானது
பாலியல் புகார் கூறிய நடிகைக்கு எதிராக ரூ.5 கோடி கேட்டு அர்ஜூன் வழக்கு
நடிகர் அர்ஜூனுக்கு தெலுங்கு நடிகை சோனி செரிஸ்டா ஆதரவு!
விளம்பரத்துக்காக பொய் சொல்கிறார் - நடிகை சுருதிஹரிகரனுக்கு அர்ஜுன் மகள் கண்டனம்
பிரபல நடிகர் ஹரி கிருஷ்ணா கார் விபத்தில் மரணம்
புதிரான இயக்குனர் படத்தில் ஹரிஷ் கல்யாண்
ஹரிஷ் கல்யாணின் அடுத்த படம், இயக்க போவது யார் தெரியுமா?
ரசிகர்களை சிரிக்க வைக்கும் வகையில் உருவாகியிருக்கும் "அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா"..!
வீரா நடிப்பில் வெளிவரவிருக்கும் "அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா"..!
பாக்ஸ் ஆபீஸை துளைக்கும் மன்மதனின் அம்பு!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions