குற்றாலத்தில் முகாமிட்டு ஸ்கிரிப்ட் எழுதிய டைரக்டர் ஹரி!

Bookmark and Share

குற்றாலத்தில் முகாமிட்டு ஸ்கிரிப்ட் எழுதிய டைரக்டர் ஹரி!

சிங்கம் படத்தை அடுத்து வேங்கை, சிங்கம்-2 படங்களை இயக்கிய ஹரி, கடைசியாக விஷால் நடித்த பூஜை படத்தை இயக்கியிருந்தார். அதையடுத்து சிங்கம்-3 படத்தை இயக்க தயாராகிக்கொண்டிருக்கிறார்.

ஏற்கனவே சிங்கம் படத்தின் இரண்டு பாகங்கள் வந்துள்ள நிலையில், 3வது பாகம் போரடித்து விடாமல் புதுமையாக இருக்க வேண்டும் என்று கடந்த 2 மாதங்களாக குற்றாலத்தில் முகாமிட்டு தீவிர கதை ஆலோசனை நடத்தி வந்தார் ஹரி.

அங்குள்ள சீசன் மற்றும் புதிய சூழல் வித்தியாசமான சிந்தனைக்கு வழிவகுக்கும் என்பதால், மொத்த ஸ்கிரிப்ட் வேலைகளும் முடியும் வரை குற்றாலத்திலேயே தனது கதை இலாகாவுடன் இருந்தவர் மொத்த ஸ்கிரிப்ட் வேலைகளும் முடிந்து விட்டதால் தற்போது சென்னை திரும்பி விட்டார்.

அதையடுத்து, ஜூன் மாதம் சிங்கம்-3 படவேலைகள் தொடங்கப்படவிருப்பதால், அடுத்தபடியாக நடிகர் நடிகைகள், டெக்னீசியன்களை ஒப்பந்தம் செய்யும் வேலைகளும் நடக்கிறது.

அதோடு, இந்த படத்துக்காக முந்தைய சிங்கம் படங்களில் இருந்து தன்னை வேறுபடுத்திக்காட்ட சூர்யாவின் கெட்டப்பையும் மாற்றப்போகிறாராம். அதனால் தற்போது 24 படத்தில் பிசியாக நடித்துக்கொண்டிருக்கும் சூர்யா, அப்பட வேலைகளை விரைவில் முடித்து விட்டு சிங்கம்-3-க்காக தன்னை தயார்படுத்தப்போகிறாராம்.

 


Post your comment





Related News
பிரபல நடிகர் ஹரி கிருஷ்ணா கார் விபத்தில் மரணம்
புதிரான இயக்குனர் படத்தில் ஹரிஷ் கல்யாண்
ஹரிஷ் கல்யாணின் அடுத்த படம், இயக்க போவது யார் தெரியுமா?
ரசிகர்களை சிரிக்க வைக்கும் வகையில் உருவாகியிருக்கும் "அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா"..!
வீரா நடிப்பில் வெளிவரவிருக்கும் "அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா"..!
பாக்ஸ் ஆபீஸை துளைக்கும் மன்மதனின் அம்பு!
பிக்பாஸ் ஷாரிக்கிற்கு மலேசிய ரசிகை செய்த விஷயம்- அவரே ஷாக் ஆகிட்டாராம்
பியார் பிரேம காதல் கதை என்ன? - ஹரிஷ் கல்யாண் ஓபன் டாக்.!
என்னை கலாய்ச்சதுக்கு நன்றி,சூப்பர்ஸ்டார் ஆவேன்! - பிக்பாஸ் ஷரீக்
பாத்ரூம் டூயட் இனி இல்லை! யாஷிகாவுக்கு ஷாரிக் கொடுத்துவிட்டு சென்ற கிப்ட்..








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions