குகைக்குள் படமான ஹரிகுமாரின் ஸ்டண்ட் காட்சி

Bookmark and Share

குகைக்குள் படமான ஹரிகுமாரின் ஸ்டண்ட் காட்சி

‘தூத்துக்குடி’, ‘மதுரை சம்பவம்’ ஆகிய படங்களில் நடித்தவர் டான்ஸ் மாஸ்டர் ஹரிக்குமார். இவர் தற்போது நடித்து வரும் புதிய படம் ‘காதல் அகதி’. இப்படத்தில் இவருக்கு ஜோடியாக ஆயிஷா நடித்து வருகிறார். பாண்டியராஜன், பிளாக் பாண்டி, தேவதர்ஷினி, சிங்கமுத்து ஆகியோரும் நடித்திருக்கிறார்கள். படத்தில் இன்னொரு நாயகன், நாயகியாக சுதர்சன், மம்தா ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

ஷாமி திருமலை இயக்கியிருககும் இப்படத்தை ராமய்யா சினி கிரியேசன்ஸ் நிறுவனம் சார்பில் ஓசூர் எம்.ராமய்யா அதிக பொருட்செலவில் தயாரித்துள்ளார். இப்படத்தின் முக்கியமான ஸ்டண்ட் காட்சியை ஓசூர் அருகே பத்ரகாசி என்ற ஊரில் சமணர்கள் பயன்படுத்திய குகை ஒன்றில் படமாக்கியுள்ளனர்.

இதுகுறித்து இயக்குனர் கூறும்போது, சமணர்கள் பயன்படுத்திய குகையின் நுழைவு வாயில் ரொம்பவும் சிறியது. ஒரு ஆள் உள்ளே போவதே ரொம்பவும் கடினம். ரொம்ப கஷ்டபட்டு உள்ளே போனால் நூறு பேர் இருக்கக்கூடிய குகை. காற்று வராது, வெளிச்சம் வராது. அங்கே ஹரிகுமார் வில்லன்களுடன் மோதும் சண்டைக் காட்சியை நான்கு நாட்கள் எடுத்தோம்.

நூற்றுக்கு மேற்பட்ட தீ வட்டியை கொளுத்தி அந்த வெளிச்சத்தில் தான் படமாக்கினோம். தீ வட்டி வெளிச்ச சூடு, காற்று வசதி இல்லாத சூழ்நிலை இதையெல்லாம் மீறி எல்லோரும் சிறப்பாக ஒத்துழைப்பு கொடுத்தார்கள். நிறைய பேர் மூர்ச்சையாகி கீழே விழுந்தார்கள். எல்லா பிரச்சினைகளும் அந்த ஸ்டன்ட் காட்சியை திரையில் பார்த்தபோது போயே போச்சு. இது பிரமிப்பாக இருந்தது என்றார். 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions