தனுஷின் ‘தொடரி’யில் சவாலான வில்லனாக நடிக்கிறேன்: ஹரீஷ் உத்தமன்

Bookmark and Share

தனுஷின் ‘தொடரி’யில் சவாலான வில்லனாக நடிக்கிறேன்: ஹரீஷ் உத்தமன்

‘தனி ஒருவன்’ படத்தில் ஜெயம் ரவியின் பஞ்சாப் நண்பராக நடித்தவர் ஹரீஷ் உத்தமன். இப்போது தனுஷ் நடிப்பில் வருகிற 22-ந் தேதி திரைக்கு வர இருக்கும் ‘தொடரி’ படத்தில் முழு வில்லன் ஆகி இருக்கிறார். 

‘தொடரி’ படத்திற்காக பத்திரிகையாளர்களை சந்தித்த ஹரிஷ் உத்தமன் பேசும்போது, ‘தொடரி’ படத்தில் தனுசுடன் மோதும் முழு வில்லனாக நடித்து இருக்கிறேன். தேசிய விருது பெற்ற அவருடன் இந்த படத்தில் நடிப்பதை நான் பெருமையாக கருதுகிறேன். 

பெரிய நடிகர் என்ற எண்ணம் அவரிடம் துளியும் கிடையாது. மிகவும் சாதாரணமாக பழகுவார். சண்டை காட்சிகளில் ரெயில் மீது நின்றும், குறுகிய இடங்களிலும் நாங்கள் மோதுவது படமாக்கப்பட்டது. அப்போது இருவருக்கும் காயம் ஏற்பட்டிருக்கிறது. அதை அவர் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் சிறப்பாக நடிப்பது பற்றி ஆலோசனை கூறினார். உடன் இருந்து ஊக்கம் அளித்தார். எனது திரை உலக பயணத்தில் ‘தொடரி’ குறிப்பிடும் படமாக அமையும்.

அடுத்து விஜய்யின் ‘பைரவா’ படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறேன். எனது நடிப்பை விஜய் பாராட்டினார். விஜய் சேதுபதியுடன் ‘றெக்க’ படத்தில் நடித்திருக்கிறேன். ‘மாவீரன் கிட்டு’, ‘ரூபாய்’, ‘சாட்டை’, நயன்தாரா நடிக்கும் ‘டோரா’ உள்பட 5 படங்களில் நடித்து வருகிறேன். 

2010-ல் நடிக்க வந்தேன். சுசீந்திரனின் ‘பாண்டியநாடு’ எனது சினிமா வாழ்க்கையில் திருப்புமுனை படமாக அமைந்தது. இதுவரை 22 படங்களில் நடித்திருக்கிறேன். நாயகன் வாய்ப்பு வருகிறது. கதையுடன் பயணிக்கும் பாத்திரங்களில் நடிப்பதையே நான் விரும்புகிறேன்” என்றார்.


Post your comment





Related News
நடிகர் அர்ஜூனுக்கு தெலுங்கு நடிகை சோனி செரிஸ்டா ஆதரவு!
புதிரான இயக்குனர் படத்தில் ஹரிஷ் கல்யாண்
ஹரிஷ் கல்யாணின் அடுத்த படம், இயக்க போவது யார் தெரியுமா?
பாக்ஸ் ஆபீஸை துளைக்கும் மன்மதனின் அம்பு!
பியார் பிரேம காதல் கதை என்ன? - ஹரிஷ் கல்யாண் ஓபன் டாக்.!
காதல் ரசிகர்களுக்கு விருந்து வைக்க வரும் பியார் பிரேம காதல்..!
பியார் பிரேமா காதல் படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம்
பியார் ப்ரேமா காதல் பட நிகழ்ச்சியில் இசைஞானி இளையராஜா பேசியதை கேட்டீர்களா..!
பியார் பிரேம காதல் படத்தின் பாடல்களை வெளியிட்ட இளையராஜா..!
ரொமாண்டிக் காமெடியில் உருவாகும் 'நிலா நிலா ஓடிவா'








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions