காக்கா முட்டை இயக்குனர் காலை தொட்டு கும்பிடுவேன் நெகிழ்ச்சியில் மலையாள காமெடி நடிகர்!

Bookmark and Share

காக்கா முட்டை இயக்குனர் காலை தொட்டு கும்பிடுவேன் நெகிழ்ச்சியில் மலையாள காமெடி நடிகர்!

மலையாள திரைஉலகில் முன்னணி காமெடியர்களில் ஒருவரான ஹரிஸ்ரீ அசோக் மலையாளத்தில் மம்முட்டி, மோகன்லால், ஜெயராம், சுரேஷ் கோபி, திலீப், குஞ்சாக்கோ போபன், பிரித்விராஜ் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து 300-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து முடித்துள்ளார். 

தற்போது தமிழில் உருவாகும் புதிய படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தில் இவர் சீரியஷான ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவர் தமிழுக்கு அறிமுகமாகும் முதல் படம் இதுதான். 

இது குறிப்பது அவர் கூறுகையில், “காமெடியன் என்றால் காமெடி மட்டும்தான் வரும் என்று நினைத்துவிடக்கூடாது. ஒரு நடிகன் என்றால் எந்த கதாபாத்திரத்திலும் நடிக்கும் திறமை வேண்டும். 

தமிழ் படத்தில் நடிப்பது ரொம்பவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. தமிழில் ரஜினி, கமல், அஜித், விஜய் ஆகியோரின் படங்கள் எனக்கு ரொம்பவும் பிடிக்கும். தமிழ் சினிமாவை பார்த்து நான் மிகவும் வியந்திருக்கிறேன். ஆக்ஷன், செண்டிமென்ட், காதல் என எந்த படமென்றாலும், தமிழ் சினிமாவில் திறமையாக எடுக்கிறார்கள். 

சமீபத்தில் வெளிவந்த ‘காக்கா முட்டை’ படத்தை பார்த்து மிகவும் ஆச்சர்யப்பட்டேன். தேசிய விருதுக்கு தகுதியான, சரியான படத்தைதான் தேர்ந்தெடுத்து கொடுத்திருக்கிறார்கள். இப்படத்தின் ஒவ்வொரு கதாபாத்திரமும் மிகவும் அழுத்தமானது. 

‘காக்காமுட்டை’ படத்தை என் நெஞ்சில் பச்சை குத்தியதுபோல் பதிய வைத்திருக்கிறேன். ‘காக்கா முட்டை’ படத்தின் இயக்குனரை நான் பார்த்தால், அவர் காலைத் தொட்டுக் கும்பிடுவேன்” என்று நெகிழ்ச்சியுடன் கூறினார். 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions