உதயநிதியால் கழற்றிவிடப்பட்ட ஹாரிஸ்

Bookmark and Share

உதயநிதியால் கழற்றிவிடப்பட்ட ஹாரிஸ்

நடிகராக புரோமோஷன் ஆவதற்கு முன் எத்தனையோ பேர் தயாரிப்பாளராக இருந்திருக்கின்றனர். அவர்களில் ஒரு சிலர் மட்டுமே  நடிகராக கால் ஊன்றி உள்ளனர். அவர்களில் உதயநிதி ஸ்டாலின் மிக முக்கியமானவர்.

குருவி படத்தின் மூலம் படத்தயாரிப்புக்கு வந்த உதயநிதி, அதன் பிறகு ஆதவன், ஏழாம் அறிவு உட்பட சில படங்களைத் தயாரித்தார். அதன் பிறகு ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தின் மூலம் கதாநாயகனாக நடிக்க ஆரம்பித்தார்.

பிறகு இது கதிர்வேலன் காதல், நண்பேன்டா ஆகிய படங்களில் நடித்தார். நண்பேன்டா படத்தைத் தொடர்ந்து தற்போது மான்கராத்தே திருக்குமரன் இயக்கும் கெத்து படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் உதயநிதி.

இப்படத்திற்குப் பிறகு ஜாலி எல்.எல்.பி. ஹிந்தி படத்தின் ரீமேக்கில் இயக்குநரான அஹமது இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார்.  உதயநிதிக்கு ஜோடியாக ஹன்சிகா மோத்வானி நடிப்பதோடு முக்கிய பாத்திரங்களில் பிரகாஷ்ராஜ், ராதா ரவி ஆகியோரும் நடிக்கிறார்கள்.

சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். உதயநிதி இதுவரை தயாரித்த படங்களுக்கு மட்டுமல்லாமல் அவர் ஹீரோவாக நடித்த எல்லா படங்களுக்கும் ஹாரிஸ் ஜெயராஜ்தான் இசையமைப்பாளர்.

உதயநிதி நடித்த இது கதிர்வேலன் காதல், நண்பேன்டா இரண்டு படங்களிலும் பாடல்கள் ஹிட்டாகாததால் ஹாரிஸை கழற்றிவிட்டு சந்தோஷ்நாராயணன் உடன்  இணைந்துள்ளார் உதயநிதி.


Post your comment





Related News
மு.களஞ்சியம் இயக்கும் “முந்திரிக்காடு“ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் வெளியிட்டார்
சூர்யாவிற்கு பல முறை, கார்த்திக்கு இது முதல் முறை
ஆரவ்வை அலற வைத்த ஹரிஷ் கல்யாண் - என்னாச்சு தெரியுமா?
யார் பெஸ்ட்? ரைசாவா? பிந்துவா? - ஹரிஷ் கல்யாணின் அதிரடி பதில்.!
கிறித்துமஸ் தினத்தில் ஹரிஷ் கல்யாண் செய்த வேலை - குவியும் பாராட்டுகள்.!
அப்பாடா என் கனவு நிறைவேறிடுச்சு - துள்ளி குதிக்கும் பிக் பாஸ் ஹரிஷ்.!
தல, தளபதியிடம் இதெல்லாம் தான் செம மாஸ் - பிக் ஹரிஷ் ஓபன் டாக்.!
சிம்புவிடம் பாராட்டையும் பரிசையும் பெற்ற பிக் பாஸ் சுட்டி - போட்டோ உள்ளே.!
வனமகன் படத்தின் பாடல் லிஸ்ட்!
ஹாரிஸ் ஜெயராஜுக்காக பாடல் எழுதத்துவங்கிய வைரமுத்துவின் பேரன்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions