மு.களஞ்சியம் இயக்கும் “முந்திரிக்காடு“ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் வெளியிட்டார்

Bookmark and Share

மு.களஞ்சியம் இயக்கும் “முந்திரிக்காடு“ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் வெளியிட்டார்

தமிழர் நலம் கலை பண்பாட்டு இயக்கம் என்ற பட நிறுவனம் தயாரிக்கும் படத்திற்கு “முந்திரிக்காடு“ என்று பெயரிட்டுள்ளனர். இந்த படத்தில் இயக்குனர் சீமான் போலீஸ் அதிகாரியாக  கதையின்  முக்கிய  கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்.

நாயகனாக புகழ் என்பவர் அறிமுகமாகிறார். இவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான C.மகேந்திரனின் மகன்.   கதாநாயகியாக சுபபிரியா நடிக்கிறார். மற்றும் ஜெயராவ், சோமு, சக்திவேல், ஆம்பல்திரு, கலைசேகரன் , பாவாலட்சுமணன் ஆகியோரும் நடிக்கிறார்கள்.

கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார்   -  மு.களஞ்சியம்.

படம் பற்றி இயக்குனரிடம் கேட்டோம்...  முந்திரிக்காட்டு மக்களின் வாழ்கை யதார்த்தத்தை இதில் பிரதிபலித்திருக்கிறோம். விலையுயர்ந்த பொருளாக மாறிப்போன முந்திரியின் விளை  நிலங்களில் சிந்தும் ஏழ்மையின் வியர்வை துளி எப்படிப்பட்டது என்பதை இதில் பதிவு செய்கிறோம்.

இந்த படத்தின் பஸ்ட் லுக் போஸ்டரை இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் வெளியிட்டார். படத்தின் இயக்குனர் மு.களஞ்சியம், படத்தின் நாயகன் புகழ், நாயகி சுபபிரியா, இசையமைப்பாளர்  A.K. பிரியன், ஒளிப்பதிவாளர் G.A. சிவசுந்தர், நடிகர் கலைசேகரன் ஆகியோர் உடன் இருந்தனர். படம் விரைவில் வெளியாக உள்ளது.     


Post your comment





Related News
சூர்யாவிற்கு பல முறை, கார்த்திக்கு இது முதல் முறை
ஆரவ்வை அலற வைத்த ஹரிஷ் கல்யாண் - என்னாச்சு தெரியுமா?
யார் பெஸ்ட்? ரைசாவா? பிந்துவா? - ஹரிஷ் கல்யாணின் அதிரடி பதில்.!
கிறித்துமஸ் தினத்தில் ஹரிஷ் கல்யாண் செய்த வேலை - குவியும் பாராட்டுகள்.!
அப்பாடா என் கனவு நிறைவேறிடுச்சு - துள்ளி குதிக்கும் பிக் பாஸ் ஹரிஷ்.!
தல, தளபதியிடம் இதெல்லாம் தான் செம மாஸ் - பிக் ஹரிஷ் ஓபன் டாக்.!
சிம்புவிடம் பாராட்டையும் பரிசையும் பெற்ற பிக் பாஸ் சுட்டி - போட்டோ உள்ளே.!
வனமகன் படத்தின் பாடல் லிஸ்ட்!
`கடுகு' படத்தில் நடித்த பாரத் சீனியை பாராட்டிய சூர்யா, லிங்குசாமி
சென்னை கடைகளில் சூர்யா அதிரடி சோதனை?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions