சினிமா ஆசையால் படிப்பை பாதியில் கைவிட்டேன்: ஹரிஷ் கல்யாண்

Bookmark and Share

சினிமா ஆசையால் படிப்பை பாதியில் கைவிட்டேன்: ஹரிஷ் கல்யாண்

வில் அம்பு படத்தில் வெற்றியை கண்ட கதாநாயகர்களில் ஒருவரான ஹரிஷ் கல்யாண் அளித்த பேட்டி... வில் அம்பு படத்தில் நான் நடித்த அருள் என்ற கதாபாத்திரம் தற்செயலாக என் நிஜ வாழ்க்கையுடன் தொடர்புடையதாக அமைந்துவிட்டது. என்ஜினீயர் ஆக வேண்டும் என்று என் அப்பா என்னை ஐ.டி.யில் சேர்த்தார்.

ஆனால் எனக்கு பிடித்தது சினிமா என்பதால் என்ஜினீயரிங் படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு சினிமா தொடர்பான விஸ்வல் கம்யூனிகேஷன் படிப்பை தபால் மூலம் கற்றேன்.

‘வில் அம்பு’ கதாபாத்திரம் அப்படியே என் வாழ்க்கையுடன் தொடர்புடையதாகி விட்டது. என் அப்பா இந்த படத்திலும் கூட எனக்கு தந்தையாக நடித்திருக்கிறார். இது இன்னொரு மகிழ்ச்சியாக அமைந்தது.
அரிது அரிது, சிந்து சமவெளி, பொறியாளன் ஆகிய படங்களை தொடர்ந்து 4–வதாக நடித்த வில் அம்பு வெற்றியடைந்து பெரிய அளவில் பேசப்படுகிறது என்பது மிக மகிழ்ச்சி.

இதனால் எனக்கு பொறுப்புகள் அதிகமாகியுள்ளது. இனி வரும் படங்களை மிக கவனமாக தேர்ந்தெடுக்க வேண்டியுள்ளது. 

எனக்கு தனி ஹீரோ கதாபாத்திரம் அமைந்த படங்களில் நடிக்க விருப்பம். ஆக்ஷன், ரொமான்ஸ், சென்டிமென்ட் என்ற எல்லா அம்சங்களும் பொருந்திய வேடங்கள் கிடைத்தால் மிக மகிழ்ச்சி.

இதில் எனது காதலியாக நடித்த சிருஷ்டி டாங்கே எல்லோரிடமும் நட்புடன் பழகினார். வில் அம்பு படத்தை பாராட்டும் திரை உலக நண்பர்களும், ரசிகர்களும் என்றும் கடமைபட்டுள்ளேன். என் மீது பெரிய நம்பிக்கை வைத்துள்ளார்கள். அதை காப்பாற்றும் விதமாக திரையுலகில் தொடர்வேன்.


Post your comment





Related News
புதிரான இயக்குனர் படத்தில் ஹரிஷ் கல்யாண்
ஹரிஷ் கல்யாணின் அடுத்த படம், இயக்க போவது யார் தெரியுமா?
பாக்ஸ் ஆபீஸை துளைக்கும் மன்மதனின் அம்பு!
பியார் பிரேம காதல் கதை என்ன? - ஹரிஷ் கல்யாண் ஓபன் டாக்.!
காதல் ரசிகர்களுக்கு விருந்து வைக்க வரும் பியார் பிரேம காதல்..!
பியார் பிரேமா காதல் படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம்
பியார் ப்ரேமா காதல் பட நிகழ்ச்சியில் இசைஞானி இளையராஜா பேசியதை கேட்டீர்களா..!
பியார் பிரேம காதல் படத்தின் பாடல்களை வெளியிட்ட இளையராஜா..!
கல்யாணமும் கடந்து போகும் வலைத்தொடர் பிராண்டுடன் இணைந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது - நலன் குமாரசாமி
வெப் சீரிஸ் தொடரை இயக்கும் நலன் குமாரசாமி..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions