முக்கோண காதல் கதையில் உருவாகும் படம்

Bookmark and Share

முக்கோண காதல் கதையில் உருவாகும் படம்

பொதுவாகவே முக்கோண காதல் கதைகளை கொண்ட திரைப்படங்கள் அவ்வப்போது வெளிவந்து பெரிய அளவில் வெற்றி பெறுவதுண்டு. தற்போது டோலிவுட்டில் பிரபலங்கள் நடிக்கும் படமான பெங்கால் டைகரிலும் இந்த முக்கோண காதல் கதை இடம் பெறப்போகின்றது.

பிரபல ஹீரோ ரவி தேஜா, தமன்னா, ராஷி கண்ணா ஆகியோர் நடிக்கும் இந்த படத்தில் மற்றொரு பிரபல ஹீரோவான ஹர்ஷவர்தன் ரானேவும் நடிக்கிறார். அவர் சமீபத்தில் நடித்து வெளிவந்த அவுனு 2 மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது நினைவிருக்கலாம். இதனை தொடர்ந்து அவர் தொடர் வெற்றி படங்களை கொடுக்க முயற்சி எடுத்து வருவதாக கூறப்படுகின்றது.

இந்நிலையில் தான் அவருக்கு பெங்கால் டைகரில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. இது குறித்து அவர் கூறியதாவது, இந்த படத்தில் எனக்கு ஒரு அருமையான வேடம்.

மிகவும் ஸ்டைலிஷான இந்த கதாபாத்திரத்தை நான் மிகவும் ரசித்து நடித்து வருகின்றேன். இதில் முக்கிய விஷயம் என்னவெனில், எனக்கும், ரவி சாருக்கும், ராஷி கண்ணாவுக்கும் இடையே முக்கோண காதல் ஏற்படுகின்றது என்றார். இந்த படத்தை பிரபல இயக்குனர் சம்பத் நந்தி இயக்கி உள்ளார். 

 

 

 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions