ஹாசிகா தத்தின் சரக்கு

Bookmark and Share

ஹாசிகா தத்தின் சரக்கு

தலைப்பை படித்து விட்டு ரொம்ப குழம்பிக்க வேண்டாம். ஹாசிகா தத் நடிக்கும் புதிய படத்தின் பெயர் சரக்கு. சில படங்களில் நடித்தாலும் ஹாசிகா தத்துக்கு பெயர் சொல்லும்படி அமைந்த படம் 1பந்து 4ரன் 1விக்கெட். அதில் பேயாக நடித்தவர், தற்போது சரக்கு படத்தில கிளாமர் கலந்த ஹீரோயினாக நடிக்கிறார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:

எனக்கு நல்ல அங்கீகாரத்தை தந்த படம் 1பந்த 4ரன் 1விக்கெட். அடுத்து சத்யா இயக்கும் சரக்கு படத்தில் நடிக்கிறேன். இந்த படம் பற்றியும், கேரக்டர் பற்றியும் இப்போது எதுவும் சொல்ல இயலாது.

இதுவரை சொல்லப்படாத புதிய கதை. புதிக களம், என்னுடைய கேரக்டரும் புதுமையானது என்பதை மட்டும் சொல்லிக்கொள்ள முடியும். முன்பு சினிமாவில் நிலைத்து நிற்கும் வழிதெரியாமல் இருந்தது.

அதனால் இப்போது உஷாராவிவிட்டேன். எனக்கென்று தனி மாஜேனர், மக்கள் தொடர்பாளரை நியமித்திருக்கிறேன். மீடியாக்களோடு நெருக்கமாக இருக்க விரும்புகிறேன். அவர்களின் ஆக்கபூர்வமான கருத்துக்கள் எனக்கும், என் நடிப்பு திறனை வளர்த்துக் கொள்ளவும் உதவியாக இருக்கும் என்கிறார் ஹாசிகா தத்.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions