உலகப் புகழ்பெற்ற நடிகையை கொண்டாடும் கூகுள் டூடுல்!

Bookmark and Share

உலகப் புகழ்பெற்ற நடிகையை கொண்டாடும் கூகுள் டூடுல்!

கம்ப்யூட்டர், டேப்லட், ஆன்ட்ராய்ட் போன் என அனைத்து மூலமும் இப்போது நம்மலால் செய்தியைப் படிக்க முடிவதற்குக் காரணம் ஒரு நடிகை. 

நாம் இப்போது பயன்படுத்தும் ப்ளூ டூத், வை-பை மற்றும் ஜிபிஎஸ் ஆகிய தொழில்நுட்பத்திற்கெல்லாம் அடி தலமாக இருந்தவர் உலகின் அழகிய பெண் என்று வர்ணிக்கப்பட்ட ஹெட்டி லாமர் (Hedy Lamarr).

அவரின் frequency-hopping என்கிற கண்டுபிடிப்பு தான் தற்போதைய spread-spectrum communication technology-யின் தொடக்கமாகும். இந்த டெக்னாலஜியால்தான் தற்போது உலகமே உள்ளங்கைக்குள் அடங்கி விட்டது. 

1913-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் பிறந்த இவர், 1930-களில் ஐரோப்பிய சினிமாவில் அறிமுகமாகி, பின்பு ஹாலிவுட்டிலும் பிரபலமாகி மிகவும் கவர்ச்சியாய் நடித்து வரவேற்பு பெற்ற இவர், "woman of the Science" என்றும் கொண்டாடப்பட்டார். 

இன்று இவரது 101-வது பிறந்த நாளை கூகுள் அற்புதமான வீடியோவுடன் அதன் டூடுல் பக்கத்தில் கொண்டாடி வருகிறது.


Post your comment

Related News
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions