லண்டனில் நடிகை ஹேம மாலினிக்கு சர்வதேச ஆளுமை விருது!

Bookmark and Share

லண்டனில் நடிகை ஹேம மாலினிக்கு  சர்வதேச ஆளுமை விருது!

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் 12-வது ஆசிய சாதனையாளர்கள் விருது வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சியில், பாரதீய ஜனதா எம்.பி.யும் நடிகையுமான ஹேம மாலினிக்கு `சர்வதேச ஆளுமை (பெர்சனாலிடி) விருது' வழங்கி கவுரவிக்கப்பட்டது. சனிக்கிழமை இரவு அங்குள்ள கிராஸ்வெனார் ஹவுஸ் ஓட்டலில் நடந்த நிகழ்ச்சியில், இவ்விருது அவருக்கு வழங்கப்பட்டது.

இந்த விருது கிடைத்தது பற்றி ஹேமமாலினி கூறியதாவது:-

இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தவர்கள் ஏசியன் வாய்ஸ் மற்றும் குஜராத் சமாச்சார் ஆகியோர் ஆவர். அரவிந்தர் சொசைட்டியின் கனவு திட்டங்களை சர்வாண் அறக்கட்டளை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. அந்த அறக்கட்டளையில் நானும் ஒரு அங்கத்தினர் என்ற வகையில் என்னை தேர்வு செய்துள்ளனர்.

இந்தியா மிகப்பெரிய தேசமாகும். குறிப்பிடத்தக்க வளர்ச்சியை நாடு பெற்றுள்ள போதும், ஒரு பக்கம் வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ளவர்களும் நிறையப்பேர் இருக்கின்றனர். வறுமை நிலையை ஒழிக்க, சர்வாண் அறக்கட்டளை பல்வேறு திட்டங்களின் கீழ், கிராமங்களில் ஏராளமான சக வசதிகளை செய்து கொடுத்து வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆயுர்வேத சிகிச்சையின் முன்னோடியான ஷானாஸ் உசேனுக்கு சிறந்த பெண் மணிக்கான விருது கிடைத்தது.


Post your comment

Related News
தயாரிப்பு நிறுவனம் துவங்கிய சினேகா- பிரசன்னா..!
மணல் புயலில் சிக்கிய அனுஷ்கா ஷர்மா: படப்பிடிப்பு ரத்து..!
உதயநிதிக்காக தீவிர பிரசாரத்தில் சந்தானம்..!
\'ஜில்லா\' நூறாவது நாள் வெற்றி விழா..!
மின்சார துறை மோசடி: சந்தானத்திற்கு ரூ.60,000 அபராதம்..!
விஜய்- அமலா பால் நிச்சயதார்த்தம்: கொச்சியில் அடுத்த மாதம்..!
\'ஹன்சிகா விஜய்யுடன்\' நடிக்க, \'சிம்பு- வாழு\' பட இயக்குனர் எதிர்ப்பு..!
விஜய்- சூர்யாவை தொடர்ந்து விக்ரமுடன் இணையும் சமந்தா..!
டைட்டானிக் படத்தின் சாதனையை முறியடித்த \'த்ரிஷயம்\' திரைப்படம்..!
பரத் 18 காமெடி நடிகர்களுடன் களமிறங்கும்: \'ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி\'..!
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2014. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions