கமிஷனர் அலுவலகத்தில் மீண்டும் புகார் கொடுத்த நடிகை ஹேமலதா

Bookmark and Share

கமிஷனர் அலுவலகத்தில் மீண்டும் புகார் கொடுத்த நடிகை ஹேமலதா

சினிமா நடிகையான ஹேமலதா இவர் புல்லுக்கட்டு முத்தம்மா என்ற தமிழ் படத்தில் நடித்துள்ளார்.

சினிமா தயாரிப்பாளராகவும் உள்ளார். இவர் கடந்த மாதம் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அளித்துள்ள புகாரில், தன்னை காதலித்து கர்ப்பமாக்கி ஏமாற்றிய கணவர் இளையராஜா மீதும் 2–வது திருமணம் செய்து வைக்க முயற்சி செய்யும் அவரது தந்தை ராஜா மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இருந்தார். 

இந்த புகார் மனு குறித்து திருமங்கலம் மகளிர் போலீசார் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது. இதை தொடர்ந்து மகளிர் போலீசாரும் நடிகை ஹேமலதாவையும் அவரது கணவர் இளைய ராஜாவையும் அழைத்து விசாரணை நடத்தினர். இதில் இருவரும் சேர்ந்து வாழ்வது தொடர்பாக உடன்பாடு ஏற்படவில்லை. 

இந்நிலையில் நடிகை ஹேமலதா கமிஷனர் அலுவலகத்தில் இன்று மீண்டும் புகார் மனு கொடுத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:– 

புகார் குறித்து திருமங்கலம் மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஐமுனா ராணி விசாரணை நடத்தினார். மகளிர் போலீசார் எனது கணவருக்கு ஆதரவாகவே செயல்பட்டனர். பாதிக்கப்பட்ட என்னை எனது புகார் மீது நடவடிக்கை எடுக்க வில்லை. மேலும் அவதூறான வார்த்தைகளாலும் மகளிர் போலீசார் திட்டினர்.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions