தேசிய விருதுகளை திருப்பி அளிப்பது குறித்து கருத்து தெரிவித்த ஹேமமாலினி

Bookmark and Share

தேசிய விருதுகளை திருப்பி அளிப்பது குறித்து கருத்து தெரிவித்த ஹேமமாலினி

உத்தரபிரதேச மாநிலம் தாத்ரி சம்பவம், புனே திரைப்பட கல்லூரி விவகாரம் ஆகியவற்றை கண்டித்து பல்வேறு எழுத்தாளர்கள், கலைஞர்கள் மற்றும் கவிஞர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட உயரிய விருதுகளை அரசிடம் திருப்பி அளித்தனர். 

மேலும், நாட்டில் சகிப்புத்தன்மை சிறிது கூட இல்லை என்றும் அவர்கள் குற்றம் சுமத்தினார்கள். இந்த நிலையில், தங்களுக்கு வழங்கப்பட்ட தேசிய விருதுகளை திருப்பி ஒப்படைப்போம் என்று இந்தி திரையுலகை சேர்ந்த 12 இயக்குனர்கள் கடந்த மாதம் அறிவித்தனர்.

இதனால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில், விருதுகளை திருப்பி ஒப்படைப்பதற்கு பிரபல நடிகையும், பாரதீய ஜனதா எம்.பி.யும் ஆன ஹேமமாலினி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மும்பையில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- 

தேசிய விருதுகளை பெறுவதற்காக மக்கள் உயிரை கொடுத்து உழைக்கிறார்கள். எனவே அவற்றை திருப்பி அளிப்பது சரியானது அல்ல. இந்த போராட்டம் அரசியல் ரீதியாக தூண்டிவிடப்பட்ட விவகாரம் என்று நான் கருதுகிறேன்.

தேசிய விருது என்பது நாட்டின் கவுரவம். தேசிய விருதுகளை பெற நீங்கள் உதவி செய்ய முடியுமா? என்று என்னிடம் கேட்டவர்கள், இன்றைக்கு அவற்றை திருப்பி அளிக்கிறார்கள்.

இவ்வாறு ஹேமமாலினி தெரிவித்தார்.


Post your comment





Related News
ஐஸ்வர்யா ராய், ஹேமமாலினிக்கு மிக உயரிய விருது
குழந்தையை காப்பாற்ற தவறியது ஏன்?: ஹேமமாலினியிடம் விளக்கம் கேட்கிறது மனித உரிமை ஆணையம்
ஹேமமாலினியுடன் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றிருந்தால் எங்கள் குழந்தை பிழைத்திருக்கும்
நடிகை ஹேமமாலினி சென்ற கார் விபத்துக்குள்ளானது: ஒரு குழந்தை பலி
அன்று கனவுக்கன்னி, இன்று பாட்டி...
ஹேமமாலினி, நக்மா நடித்த படங்களை டிவியில் ஒளிபரப்ப தடை..!
நடிகைக‌ள் ஹேமமாலினி,மாதுரி தீட்சித் கன்னங்களை வர்ணித்து.. சர்ச்சையில் சிக்கிய அமைச்சர்!
தற்போது உள்ள நடிகர்களில் சல்மான்கான் என்னைப்போல் உள்ளார்: ஹேமமாலினி கண‌வர் தர்மேந்திரா பேட்டி!
கனவுக்கன்னி ஹேமமாலினியின் மகள் ஈஷா தியோலின் திருமணம்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions