குழந்தையை காப்பாற்ற தவறியது ஏன்?: ஹேமமாலினியிடம் விளக்கம் கேட்கிறது மனித உரிமை ஆணையம்

Bookmark and Share

குழந்தையை காப்பாற்ற தவறியது ஏன்?: ஹேமமாலினியிடம் விளக்கம் கேட்கிறது மனித உரிமை ஆணையம்

பாலிவுட் நடிகையும், பார்லிமென்ட் உறுப்பினருமான ஹேமமாலினி கடந்த சில தினங்களுக்கு முன்பு ஜெய்ப்பூர் அருகே நடந்த சாலை விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார். அந்த விபத்தில் மேலும் 4 பேர் படுகாயம் அடைந்தார். 4 வயது சிறுமி ஒருவரும் உயிர் இழந்தார்.

இந்த விபத்து நடந்ததும் ஹேமமாலியின் உதவியாளர் அவருக்கு நெருக்கமானவர்களுக்கு தகவல் சொல்ல விரைந்து வந்த உறவினர்களும், போலீசும் ஹேமமாலினியை தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

இந்த வேகத்தையும், அக்கறையையும் விபத்தில் காயம் அடைந்த மற்றவர்கள் மீது போலீசும், உள்ளூர் நிர்வாகமும் காட்டவில்லை என்றும், உயிருக்கு போரடிக்கொண்டிருந்த சிறுமியை ஹேமமாலினி அழைத்துச் செல்லப்பட்ட காரில் அழைத்துச் சென்றிருந்தால் காப்பாற்றியிருக்க முடியும் என்றும் தற்போது சர்ச்சைகள் எழுந்துள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு ஹேமமாலியின் மகள், இறந்த சிறுமியின் குடும்பதிற்கு உதவி செய்யப்படும் என்ற அறிவித்தார். ஆனால் தற்போது விபத்து காயத்திலிருந்து குணமடைந்து வரும் ஹேமமாலினி மாற்றிப் பேசுகிறார். அவர் தனது டுவிட்டர் வலை தளத்தில் விபத்து குறித்து எழுதியிருப்பதாவது: விபத்துக்கு காரணம் அந்த குழந்தையின் தந்தைதான்.

அவர் போக்குவரத்து விதிகளை பின்பற்றியிருந்தால் விபத்து நடந்திருக்காது. குழந்தையும் இறந்திருக்காது. நடந்த விபத்துக்காக நான் மிகுந்த வருத்தம் அடைகிறேன். என்று குறிப்பிட்டுள்ளார்.

"நான் போக்குவரத்து விதியை சரியாக பின்பற்றினேன். இண்டிகேட்டரை ஆன் செய்துதான் வண்டியை திருப்பினேன். ஹேமமாலினியின் கார் அதிவேகமாக வந்ததுதான் விபத்துக்கு காரணம்.

அவர் பிரபலமானவர் என்பதால் அவர் குரல் அதிகமாக ஒலிக்கிறது. அவர் நினைத்திருந்தால் என் குழந்தையை காப்பாற்றிருக்கலாம்" என்று காரை ஓட்டி வந்த மகாஜன் கூறியிருக்கிறார்.

இதற்கிடையில் குழந்தையின் உயிரை காப்பாற்றத் தவறியதற்காக இணைய தளங்களில் ஹேமமாலினிக்கு கண்டனங்கள் குவிந்து வருகிறது. இந்த சம்பவம் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு சம்பந்தப்பட்டவர்கள் அனைவருக்கும், ராஜஸ்தான் மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.


Post your comment

Related News
ஐஸ்வர்யா ராய், ஹேமமாலினிக்கு மிக உயரிய விருது
தேசிய விருதுகளை திருப்பி அளிப்பது குறித்து கருத்து தெரிவித்த ஹேமமாலினி
ஹேமமாலினியுடன் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றிருந்தால் எங்கள் குழந்தை பிழைத்திருக்கும்
நடிகை ஹேமமாலினி சென்ற கார் விபத்துக்குள்ளானது: ஒரு குழந்தை பலி
அன்று கனவுக்கன்னி, இன்று பாட்டி...
ஹேமமாலினி, நக்மா நடித்த படங்களை டிவியில் ஒளிபரப்ப தடை..!
நடிகைக‌ள் ஹேமமாலினி,மாதுரி தீட்சித் கன்னங்களை வர்ணித்து.. சர்ச்சையில் சிக்கிய அமைச்சர்!
தற்போது உள்ள நடிகர்களில் சல்மான்கான் என்னைப்போல் உள்ளார்: ஹேமமாலினி கண‌வர் தர்மேந்திரா பேட்டி!
கனவுக்கன்னி ஹேமமாலினியின் மகள் ஈஷா தியோலின் திருமணம்!
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions