அன்று கனவுக்கன்னி, இன்று பாட்டி...

Bookmark and Share

அன்று கனவுக்கன்னி, இன்று பாட்டி...

தமிழ்நாட்டைச் சேர்ந்த ஹேமமாலினி, ஹிந்தித் திரையுலகில் 1960களில் நுழைந்து படிப்படியாக உயர்ந்த ஹிந்தித் திரையுலகில் கனவுக் கன்னியாக ஆனால். அதன் பின் பிரபல நடிகரான தர்மேந்திராவைக் காதலித்து கரம் பிடித்தார்.

அவர்களுக்கு இஷா தியோல், அஹானா தியோல் என இரண்டு மகள்கள் உள்ளனர். இஷா தியோல் மணிரத்னம் இயக்கத்தில்  ஆய்த எழுத்து படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்தார். சில ஹிந்திப் படங்களிலும் நடித்த இஷா அதன் பின் திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார். அஹானா தியோல் கடந்த ஆண்டு வைபவ் வோரா என்பவரைத் திருமணம் செய்து கொண்டார்.

கடந்த ஜுன் 11ம் தேதியன்று, அஹானா, அழகான ஆண் குழந்தைக்குத் தாயாகியுள்ளார். இதன் மூலம் ஹேமமாலினி அதிகாரப்பூர்வமாக பாட்டியாகிவிட்டார். அது குறித்து ஹேமமாலினி கூறுகையில், “உங்கள் அனைவரின் வாழ்த்துகளுக்கும் நன்றி.

அஹானா, அழகான ஆண் குழந்தையைப் பெற்றுள்ளார். எங்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியாக உள்ளது. அம்மாவும், குழந்தையும் நலமாக உள்ளனர்,” என தன்னுடைய மகிழ்ச்சியை டிவிட்டரில் பகிர்ந்துள்ளார்.


Post your comment





Related News
ஐஸ்வர்யா ராய், ஹேமமாலினிக்கு மிக உயரிய விருது
தேசிய விருதுகளை திருப்பி அளிப்பது குறித்து கருத்து தெரிவித்த ஹேமமாலினி
குழந்தையை காப்பாற்ற தவறியது ஏன்?: ஹேமமாலினியிடம் விளக்கம் கேட்கிறது மனித உரிமை ஆணையம்
ஹேமமாலினியுடன் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றிருந்தால் எங்கள் குழந்தை பிழைத்திருக்கும்
நடிகை ஹேமமாலினி சென்ற கார் விபத்துக்குள்ளானது: ஒரு குழந்தை பலி
ஹேமமாலினி, நக்மா நடித்த படங்களை டிவியில் ஒளிபரப்ப தடை..!
நடிகைக‌ள் ஹேமமாலினி,மாதுரி தீட்சித் கன்னங்களை வர்ணித்து.. சர்ச்சையில் சிக்கிய அமைச்சர்!
தற்போது உள்ள நடிகர்களில் சல்மான்கான் என்னைப்போல் உள்ளார்: ஹேமமாலினி கண‌வர் தர்மேந்திரா பேட்டி!
கனவுக்கன்னி ஹேமமாலினியின் மகள் ஈஷா தியோலின் திருமணம்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions