17வது ஆண்டுகளை கடந்த கமல்ஹாசன் ஹே ராம்!

Bookmark and Share

17வது ஆண்டுகளை கடந்த கமல்ஹாசன் ஹே ராம்!

தமிழ் சினிமாவில் பல சோதனை முயற்சிகளை பல வருடங்களுக்கு முன்பே ஆரம்பித்தவர் கமல்ஹாசன். அவருடைய பல படங்கள் அன்றைய சாதாரண ரசிகர்களுக்குச் சென்று சேரவில்லை என்பதுதான் உண்மை.

அந்த வரிசையில் இடம் பெற்ற படங்களில் ஒன்று ஹே ராம். சுதந்திரப் போராட்டம் நடந்த காலத்தில் நடந்த கதையாக வெளிவந்த இந்தப் படம் வெளிவந்து இன்றுடன் 16 ஆண்டுகள் நிறைவடைகிறது. ஷாரூக்கான் தமிழில் நடித்த முதல் படம் என்ற பெருமை இந்தப் படத்திற்கு உண்டு.

ராணி முகர்ஜி, ஹேமமாலினி, அதுல் குல்கர்னி, கிரிஷ் கர்னார்ட், நஸ்ருதீன் ஷா, நாசர், வசுந்தரா தாஸ் என இந்தியத் திரையுலகில் குறிப்பிடத்தக்க பல சிறந்த நட்சத்திரங்கள் நடித்த படம் இது. கமல்ஹாசன் எழுதி இயக்கி நாயகனாக நடித்த இந்தப் படத்தின் திரைக்கதைதான் பலரையும் குழப்பிவிட்டது.

இன்றும் இந்தப் படத்தைப் பார்ப்பவர்களுக்கு சரியாகப் புரியுமா என்பது சந்தேகம்தான். ஆனாலும், கதை சொல்லலிலும், திரைக்கதை அமைப்பிலும் மிகப் பெரும் வித்தியாசத்தை ஏற்படுத்திய படம் இது.

அப்படிப்பட்ட படம் இந்தக் காலத்தில் வந்திருந்தால் மிகப் பெரிய வெற்றியை பெற்றிருந்தாலும் பெற்றிருக்கும். ஆனால், 16 வருடங்களுக்கு முன்பே வந்ததுதான் தவறாக இருக்கலாம்.

இளையராஜாவின் பின்னணி இசையும், பாடல்களும் நம்மை வேறு உலகத்திற்கே அழைத்துச் சென்ற படம். கமல்ஹாசன் ஒரு சகல கலா வல்லவன் என்பதை மீண்டும் நிரூபித்ததில் இந்தப் படத்திற்கு பெரிய பங்கு உண்டு.


Post your comment





Related News
கமல் ரசிகன் என்ற முறையில் அவர் மீது வருத்தம் - படவிழாவில் சுரேஷ் காமாட்சி பேச்சு
இந்தியன் 2 படத்தில் இரட்டை வேடத்தில் கமல் ஹாசன்
பூஜையுடன் துவங்கிய விக்ரமின் அடுத்த படம்
கமல் ரசிகர் பற்றிய படத்தில் சிம்பு பாடல்
ஜெயலலிதா வாழ்க்கைப் படத்தில் கமல்ஹாசன், மோகன்லால்
சினிமாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறது - ஸ்ருதிஹாசன்
ஸ்ரீ க்ரீன் புரோடக்ஷன்ஸ் M.S.சரவணன் தயாரிப்பில் ஜி.வி.பிரகாஷ் குமார் நடிக்கும் "அடங்காதே" - டப்பிங் இன்று துவங்கியது
அமெரிக்காவில் நடைபெறும் இந்திய சுதந்திர தின விழாவில் கமல்ஹாசன், ஸ்ருதி பங்கேற்பு
சீதக்காதி, கலைக்கு முடிவே இல்லை என்பதை உணர்த்தும் படம் - விஜய் சேதுபதி..!
எங்களை பிக்பாஸ் வீட்டிற்குள் விட்டால் இதுதான் நடக்கும் நிச்சயம்! ஜோடியாக வரவிரும்பும் பிரபல நடிகர், நடிகை இவர்கள் தான்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions