25 லட்சம் மக்களை கவர்ந்த சாமியார் நடிகர் - யார் அவர் ?

Bookmark and Share

25 லட்சம் மக்களை கவர்ந்த சாமியார் நடிகர் - யார் அவர் ?

பஞ்சாப்பில் சீக்கியர்களின் ஒரு பிரிவான ‘‘தேரா சச்சா சவுதா’’ அமைப்பின் தலைவராக இருப்பவர் குர்மீத் ராம் ரஹீம் சிங். இவர் பஞ்சாப் ஓட்டியுள்ள ஹரியானாவில் தனக்கென்று ஒரு மாபெரும் கூட்டத்தை வைத்துள்ளார். அவர் சொல்வது தான் அங்கு கடவுள் சொல்வது போல எடுத்துக்கொள்கின்றனர்.

ஹரியானாவில் ஒரு தனி ராஜாங்கமே நடத்தி வருகிறார் குர்மீத் ராம் ரஹீம் சிங். காலேஜ், ஸ்கூல் , ஹோட்டல் என்ற அந்த ஹரியானா சுற்றி சில பல ஏரியாக்களே அவர் கையில் தான் உள்ளது. இந்நிலையில் இவருக்கு சினிமா மோகம் காரணமாக ஏற்கனவே எம்எஸ்ஜி , எம்எஸ்ஜி "தி மெஸஞ்சர் ஆஃப் காட் என்ற படங்களில் தன்னை கடவுளை போல் சித்தரித்து நடித்துள்ளார். இந்த திரைப்படத்துக்கு சில அமைப்பினர் எதிரிப்பு தெரிவித்தாலும் படம் வெளிவந்து ஹரியானா மக்களை கவர்ந்தது.

இந்நிலையில் இவர் அடுத்த HIND KA NAPAK KO JAWAB Msg Lion Heart என்று பெயரில் ஒரு படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் அறிமுக விழா ஹரியானாவில் கிட்டத்தட்ட 25 லட்சம் மக்கள் முன்னிலையில் நடந்தது. பிரம்மாண்டத்தின் உச்சமாக அந்த விழா மிகப்பெரிய பொருட் செலவில் நடந்துள்ளது . இந்த விழாவில் சிறப்பு அம்சமாக ஹரியானாவில் படிப்பிலும், விளையாட்டிலும் சிறந்து விளங்கும் இளைஞர்களுக்கு பல பரிசுகளை வழங்கி ஊக்குவித்தார். அதுமட்டுமில்லாமல் 15௦ இளம் ஜோடிகளுக்கு திருமணமும் செய்து வைத்தார்.

அதன் பிறகு மக்கள் ஆவலாக எதிர்பார்த்த முக்கிய தருணமான ட்ரைலர் வெளியிடப்பட்டு மிகப்பெரிய வரவேற்பை அங்கு இருக்கும் மக்களிடம் பெற்றது. வருகிற பிப்ரவரி 10ம் தேதி படத்தை உலகம் முழுவதும் வெளியிடவுள்ளனர். மேலும் இப்படம் தமிழ். தெலுங்கு மொழிகளிலும் வெளியாக அதிக வாய்ப்பு உள்ளது.


Post your comment

Related News
நயன்தாராவின் வளர்ச்சி குறித்து வியக்கும் ஜோதிகா
பூஜையுடன் அடுத்த படத்தை துவங்கிய அரவிந்த்சாமி
சர்கார் சர்ப்ரைஸ் - முதல் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு
சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தை இயக்கும் பி.எஸ்.மித்ரன்
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு
நடிகை ராதிகா ஆப்தேவிடம் லிப்டில் அத்துமீறிய நடிகர்
வசூல் சாதனையில் சீமராஜா! - வேற லெவல் வரவேற்பு
மிமிக்ரி கலைஞரை மணக்கிறார் பிரபல பின்னணி பாடகி வைக்கம் விஜயலட்சுமி
ஜோதிகாவின் அடுத்த பட அறிவிப்பு
சினிமாவில் நடிக்க காதல் திருமணத்தை நிறுத்திய நடிகை
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions