“ஹிப் ஹாப் தமிழா” ஆதியின் ஜல்லிக்கட்டு வீடியோ ஆல்பம்!

Bookmark and Share

“ஹிப் ஹாப் தமிழா” ஆதியின் ஜல்லிக்கட்டு வீடியோ ஆல்பம்!

பல ஆல்பம் பாடல்களை கொடுத்த “ஹிப் ஹாப் தமிழா” ஆதி தற்போது ஜல்லி கட்டுக்கு ஆதரவாக புதிய வீடியோ ஆல்பம் ஒன்றை தந்துள்ளார்.

“டக்கரு டக்கரு” என தொடங்கும் இப்பாடலில் அவர் “ஒரு காளையை தழுவும்போது, அந்த காளை எல்லாவற்றையும் தாண்டி ஒரு 50 அடி தூரம் சென்றுவிட்டால் அந்த காளைக்கு வீரியம் அதிகம் என்று கூறி அதை இனப்பெருக்கத்திற்கு அனுப்புவார்கள்.

தோற்றுப்போன காளைகளை விவசாயத்துக்கு பயன்படுத்திக் கொள்வார்கள். இதற்கு தடை கோருபவர்கள் யாரென்று கேட்டால், நிறைய பேர் அரசாங்கம் என்று கூறுகிறார்கள். உண்மையில், தமிழக அரசாங்கம் இன்று மட்டுமல்ல, என்றைக்கும் ஆதரவாகத்தான் இருந்து வருகிறது. இதற்கு தடை கோருபவர்கள் நிறைய தனியார் அமைப்புகள்தான். அதில் பல பேர் வெளிநாட்டை சேர்ந்தவர்கள்.

கிரிக்கெட்டை பற்றி தெரிந்துகொள்ள வேண்டுமென்றால் கிரிக்கெட் நிபுணர்களிடம் கேட்கிறோம். கால் பந்தை பற்றி தெரிந்துகொள்ள வேண்டுமென்றால் அந்த விளையாட்டை பற்றி தெரிந்தவர்களிடம் கேட்கிறோம். ஆக, ஜல்லிக்கட்டை பற்றி தெரிந்துகொள்ள வேண்டுமென்றால், மாடு வளர்க்கிறவர்களிடம் கேட்கவேண்டும், மாடு பிடிப்பவர்களிடம் கேட்கவேண்டும்.

10 வருடத்திற்கு முன்பு சுமார் 9 லட்சம் காளைகள் இருந்தது. இப்போது சுமார் 60 ஆயிரம் காளைகள்தான் இருக்கிறது. இனி 3 வருடத்தில் என்னாகும்.

இதற்கு முக்கியமான காரணம் நமது அறியாமையால்தான் இது அழிந்துகொண்டு வருகிறது. இது நமது அடையாளம். அடையாளத்தை இழந்தால் நமது தாய்நாட்டில் நாம் அகதிகளாகத்தான் வாழவேண்டும். கண்டிப்பாக சிந்திப்போம்..! செயல்படுவோம்..! என்று கூறி முடித்துள்ளார். இப்பாடல் எல்லோரிடத்திலும் நல்ல வரவேற்பை பெரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

 


Post your comment





Related News
பிரியங்கா சோப்ராவுடனான காதல் பற்றி மனம்திறந்த நிக் ஜோனஸ்
சிம்பு, விக்ரம் பட இயக்குனருடன் இணைந்த விஜய் சேதுபதி
ரஜினிகாந்த் - விஜய் சேதுபதி படத்தின் முக்கிய அறிவிப்பு
பிரியங்கா சோப்ராவுடன் நிச்சயதார்த்தம் - நிக் ஜோனஸின் முன்னாள் காதலி வருத்தம்
2 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் மோதும் விஜய்சேதுபதி - சிவகார்த்திகேயன்
விஜய் சேதுபதி நடிக்கும் 96 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
அனிருத் இல்லையா..? சிம்பு - சுந்தர்.சி படத்தின் இசையமைப்பாளர் இவர்தானாம்..!
சிவகார்த்திகேயனுடன் கை கோர்க்கும் ஹிப்ஹாப் ஆதி..!
மிக விரைவில் தடம் பதிக்க வரும் அருண் விஜய்
மிதாலி ராஜ் வாழ்க்கைப் படத்தில் டாப்சி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions