ஹிப் ஹாப் தமிழா ஆதியின் அடுத்த படம்

Bookmark and Share

ஹிப் ஹாப் தமிழா ஆதியின் அடுத்த படம்

ஹிப் ஹாப் தமிழா ஆதி இயக்கி, நாயகனாக அறிமுகமான `மீசைய முறுக்கு' படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. ஆதியின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகிய அந்த படத்தை சுந்தர்.சி அவரது சொந்த நிறுவனமான அவ்னி மூவிஸ் மூலம் தயாரித்திருந்தார். 

சுந்தர்.சி தற்போது `கலகலப்பு-2' படத்தை இயக்கி வருகிறார். ஹப் ஹாப் ஆதி இசையமைக்கும் இந்த படத்தையும் அவ்னி மூவிஸ் தயாரிக்கிறது. 

அதனைத் தொடர்ந்து புதுமுக இயக்குநர் ஒருவர் இயக்கவிருக்கும் புதிய படத்தை அவ்னி மூவிஸ் தயாரிக்க இருக்கிறது. அந்த படத்தில் ஹிப் ஹாப் ஆதி நாயகனாக நடிக்கிறார். ஹாக்கி விளையாட்டை மையமாக வைத்து உருவாகவிருக்கும் அந்த படத்திற்கான முதற்கட்ட பணிகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது. 

வருகிற டிசம்பர் முதல் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. `மீசைய முறுக்கு' படத்திற்கு பிறகு அதே கூட்டணி மீண்டும் இணைந்திருப்பது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை கூட்டியிருக்கிறது. 


Post your comment





Related News
என் தம்பி இறந்துட்டார், கண்ணீரில் தத்தளிக்கும் பிரபல நடிகர் - அதிர்ச்சி தகவல்
அஜித் ஸ்டைலை அப்படியே பின்பற்றும் மெகா ஹிட் நடிகரின் மகன் - புலம்பும் படக்குழு.!
நடு ரோட்டில் லிப்ஸ் டு லிப்ஸ் கிஸ், வசமாக சிக்கிய தளபதி பட நடிகை - புகைப்படம் உள்ளே.!
நடிகர்கள் பார்த்திபன், விஜய் சேதுபதி உள்ளிட்ட 11 பேருக்கு பெரியார் விருது - தி.க. தலைவர் வீரமணி அறிவிப்பு
நட்சத்திர விழா கொண்டாட்டம்- ஆனால் பிரபல நாயகிக்கு ஏற்பட்ட அவமானம்
தமிழ் திரையுலகில் முதல் முறையாக ஹிப் ஹாப் ஆதிக்கு கிடைத்த பெருமை - வியப்பில் கோலிவுட்.!
11 புள்ள பெத்துக்கணும், ஆனால் - தளபதி நாயகியின் விபரீத ஆசை.!
டாக்டர் பட்டமளிப்பு விழா: மனமுடைந்த பிரியங்கா சோப்ரா
டாப் 10 கோட்டீஸ்வரர் பட்டியலில் இடம் பிடித்த ஒரே ஒரு முன்னணி நடிகை - லிஸ்ட் உள்ளே.!
ஆசியாவின் கவர்ச்சிக் கன்னியாக பிரியங்கா சோப்ரா தேர்வு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions