'ஹிப் ஹாப் தமிழா' ஹிட் ஆனாரா இல்லையா...?

Bookmark and Share

'ஹிப் ஹாப் தமிழா' ஹிட் ஆனாரா இல்லையா...?

'ஹிப் ஹாப் தமிழன்' இசை ஆல்பம் மூலம் இசையுலகிற்கு அறிமுகமானவர் ஆதி. அந்த ஆல்பத்தில் இடம் பெற்ற 'கிளப்புல மப்புல...' என்ற பாடல் மூலம் இசை ரசிகர்களிடம், இசையமைப்பாளர்களாலும் அதிகம் கவனிக்கப்பட்டார். இந்தியாவின் முதல் தமிழ் ஹிப் ஹாப் ஆல்பம் என்ற பெயருடன் வெளிவந்த அந்த ஆல்பம் நல்ல வரவேற்பைப் பெற்றதன் மூலம் தன் பெயருடன் 'ஹிப் ஹாப் தமிழா' என்ற அடைமொழியையும் சேர்த்துக் கொண்டார் ஆதி.

தமிழ் சினிமாவில் விஜய் ஆண்டனி இசையமைப்பில் வெளிவந்த 'நான்' படத்தில் இடம் பெற்ற 'தப்பெல்லாம் தப்பேயில்லை...' என்று அவர் பாடிய முதல் பாடலும் ஹிட் ஆக தொடர்ந்து அனிருத் இசையில் 'எதிர் நீச்சலடி..., சென்னை சிட்டி கேங்ஸ்டர்..., பக்கம் வந்து...” ஆகிய நான்கு ஹிட் பாடல்களிலேயே தன்னை தனியாக அடையாளப்படுத்திக் கொண்டார்.

அதுவே அவருக்கு 'ஆம்பள' படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பையும் பெற்றுத் தந்தது. அனுபவம் வாய்ந்த இயக்குனர் சுந்தர் .சி, முன்னணி நடிர்களில் ஒருவரான விஷால் இணைந்த படம் என்பதால் அவருடைய இசையமைப்பாளர் அறிமுகமும் மக்களிடம் சென்று அடைந்தது.  

ஆனால், அவருடைய இசையமைப்பு அந்தப் படத்தில் மக்களிடையே சென்று சேர்ந்ததா என்றால் அது கேள்விக்குறிதான். ஹிப்ஹாப் பாடல்களைப் போன்றே படத்தில் இடம் பெற்ற பாடல்களுக்கு இசையமைத்திருந்தார்.

அது 'ஏ' சென்டர் ரசிகர்களுக்கு வேண்டுமானால் புரியும், 'பி' அன்ட் 'சி' ரசிகர்களுக்கு அவ்வளவாகப் புரியாது. அதோடு படத்தில் இடம் பெற்ற அனைத்துப் பாடல்களையும் அவரே எழுதியிருந்தார்.

படத்தில் இடம் பெற்ற மூன்று பாடல்களையும் அவரே பாடியிருந்தார். இசையைமத்து, பாடல்களையும் எழுதி, பாடுவதையும் செய்து மற்ற பாடலாசிரியர்களுக்கும் வழி விடாமல், மற்ற பாடகர், பாடகிகளுக்கும் வழி விடாமல் செய்து விட்டார் என்ற ஒரு படம் வெளியானதற்குப் பின் எழுந்துள்ளது.

'ஆம்பள' படம் 'பி அன்ட் சி' ரசிகர்களுக்கான ஒரு படம், அதில் ஹிப் ஹாப் பாடலைக் கலந்தது ரசிகர்களுக்கு வெறுப்பைத்தான் தந்துள்ளது. சினிமாவிற்கு இசையமைப்பது என்பது வேறு, ஆல்பத்திற்கு இசையமைப்பது என்பது வேறு என்பதை இனிவரும் படங்களிலாவது ஹிப் ஹாப் தமிழா புரிந்து கொள்வாரா என்றுதான் அவருக்கு வாய்ப்பு கொடுக்க நினைக்கும் பலர் கேள்வி எழுப்புகிறார்கள்.


Post your comment





Related News
சபரிமலை விவகாரம் - விஜய் சேதுபதி கருத்துக்கு ஆதரவும், எதிர்ப்பும்
விஜய் சேதுபதிக்கு சுருதிஹாசன் ஜோடி
சிவகார்த்திகேயன் பட இயக்குனர் படத்தில் விஜய் சேதுபதி
விஜய் சேதுபதி மகா நடிகன், ரொம்ப நாளுக்கு பிறகு நல்ல நடிகருடன் நடித்த உணர்வு - ரஜினி பேச்சு
பேட்ட படத்தின் இசை வெளியீட்டு விழா - ரஜினிகாந்த், விஜய்சேதுபதி பங்கேற்பு
ஜோத்பூர் அரண்மனையில் பிரியங்கா சோப்ரா - நிக் ஜோனஸ் திருமணம்
பிரியங்கா சோப்ரா - நிக் ஜோனஸ் திருமண நிகழ்ச்சியில் திடீர் மாற்றம்
சூப்பர் ஸ்டாராக கலக்கிய விஜய் சேதுபதி
ஹிப்ஹாப் ஆதி நடிக்கும் அடுத்த படத்தின் முக்கிய அறிவிப்பு
அஞ்சலியை தாய்லாந்து அழைத்து செல்லும் விஜய்சேதுபதி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions