இந்தாண்டும் நல்ல பாடல்களை கொடுப்பேன் - பிறந்தநாளில் ஹிப்-ஹாப் ஆதி பேட்டி!

Bookmark and Share

இந்தாண்டும் நல்ல பாடல்களை கொடுப்பேன் - பிறந்தநாளில் ஹிப்-ஹாப் ஆதி பேட்டி!

கடந்தாண்டு அறிமுகமான இசையமைப்பாளர்களில் இளம் ரசிகர்களை அதிகம் கவர்ந்த இசையமைப்பாளராக ஹிப்ஹாப் தமிழா ஆதி இருக்கிறார்.

தனியாக ஆல்பங்கள் இயக்கி வந்தவர், சுந்தர்.சி-யின் ஆம்பள படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். தொடர்ந்து இவர் இசையில் வெளிவந்த இன்று நேற்று நாளை, தனி ஒருவன் ஆகிய படங்கள் வெற்றிப் படங்களின் வரிசையில் இடம் பிடித்தது.

அவற்றில் தனி ஒருவன் படத்திற்கு தனி இடமுண்டு. தற்போது தமிழில் சில படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.இந்நிலையில் ஆதிக்கு இன்று பிறந்தநாள். இந்தாண்டு தனது பிறந்தநாளை ஐதராபாத்தில் எளிமையாக கொண்டாடினார்.

தற்போது ஆதி, தனி ஒருவன் தெலுங்கு ரீ-மேக் படத்திற்கு முழு மூச்சாக இசை அமைத்து வருகிறார். இதில் ராம் சரண் ஹீரோவாக நடிக்கிறார்.

பிறந்தநாளையொட்டி அவர் நமக்கு அளித்த சிறப்பு பேட்டி... கடந்தாண்டு எனது இசையமைப்பில் வெளிவந்த படங்களின் பாடல்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. பாடல்களும் வெற்றி பெற்றன.

அதேப்போல் இந்தாண்டு சிறப்பான பாடல்களை கொடுக்க கடுமையாக உழைப்பேன், தற்போது தனி ஒருவன் தெலுங்கு ரீ-மேக்கிற்கு இசையமைத்து வருகிறேன் என்று கூறியுள்ளார்.

 


Post your comment





Related News
சிம்பு, விக்ரம் பட இயக்குனருடன் இணைந்த விஜய் சேதுபதி
ரஜினிகாந்த் - விஜய் சேதுபதி படத்தின் முக்கிய அறிவிப்பு
2 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் மோதும் விஜய்சேதுபதி - சிவகார்த்திகேயன்
முதல்முறையாக சிம்புவுடன் கைகோர்க்கும் ஆதி
விஜய் சேதுபதி நடிக்கும் 96 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
அனிருத் இல்லையா..? சிம்பு - சுந்தர்.சி படத்தின் இசையமைப்பாளர் இவர்தானாம்..!
ஆதி நடிக்கும் ஆர் எக்ஸ் 100
சிவகார்த்திகேயனுடன் கை கோர்க்கும் ஹிப்ஹாப் ஆதி..!
சமந்தாவின் U Turn படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்..!
பெரும் எதிர்பார்ப்பில் விஜய் சேதுபதியின் ஜூங்கா!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions