
தமிழ் சினிமாவில் டைரக்டர்கள், பாடலாசிரியர்கள் ஹீரோவாக காலம் மாறி இப்போது, இசையமைப்பாளர்கள் ஹீரோவாகும் காலகட்டமாகியுள்ளது. அந்த வகையில், நான், சலீம் படங்களில் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி நாயகனாக நடித்ததை அடுத்து, டார்லிங் படத்தில் ஜி.வி.பிரகாஷ்குமார் ஹீரோவாக நடித்தார். ஆக, இரண்டு முன்னணி இசையமைப்பாளர்கள் ஹீரோவாக அரிதாரம் பூசி விட்டனர்.
இந்த நிலையில், மியூசிக் ஆல்பங்களுக்கு இசையமைத்து வந்த ஹிப் ஹாப் தமிழன் ஆதியை, விஷால் நடித்த ஆம்பள படத்தில் இசையமைப்பாளர் ஆக்கினார் சுந்தர்.சி., ஆனால் இப்போது ஹிப் ஹாப் தமிழன் ஆதியும் விரைவில் ஹீரோவாக நடிக்க அரிதாரம் பூச தயாராகிக்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. அவரை சினிமாவில் மியூசிக் டைரக்டராக்கிய சுந்தர்.சியே அடுத்து தான் இயக்கும் படத்தில் ஹிப் ஹாப் தமிழன் ஆதியை ஹீரோவாக நடிக்க வைக்கிறாராம்.
அந்த படத்தில் ஹன்சிகா போன்ற ஒரு முன்னணி நடிகை நடிப்பதோடு, சந்தானமும் இன்னொரு ஹீரோ போன்று படம் முழுக்க வந்து அமர்க்களம் செய்யப்போகிறாராம்.
Post your comment