‘வேலை இல்லா பட்டதாரி’யின் சகோதரர் கதாநாயகனாக அறிமுகமாகும் படம் ரம்!

Bookmark and Share

‘வேலை இல்லா பட்டதாரி’யின் சகோதரர் கதாநாயகனாக அறிமுகமாகும் படம் ரம்!

“என் தம்பிக்கு மட்டும் ஹீரோ பேரு கார்த்திக், எனக்கு மட்டும் வில்லன் பேரு ரகுவரன்” என்கிற ‘வேலை இல்லா பட்டதாரி’ படத்தின் வசனத்தை கேட்டிறாதவர்கள் யாரும் இருக்க முடியாது.

வி ஐ பி படத்தில் தனுஷின் சகோதரராக நடித்த ஹ்ரிஷிகேஷ், தனது வெகுளித்தனமான கதாப்பாத்திரத்தாலும், இயல்பான நடிப்பாலும், நம் குடும்பங்களில் ஒருவர் போலவே ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துவிட்டார்.

தற்போது இவர் கதாநாயகனாக உருவெடுத்துள்ள திரைப்படம் தான் ‘ரம்’. புதுமுக இயக்குனர் சாய் பரத் இயக்கி, ‘ஆல் இன் பிச்சர்ஸ்’ விஜயராகவேந்திரா தயாரித்து வழங்கும் ‘ரம்’ திரைப்படத்தில் விவேக், சஞ்சிதா ஷெட்டி, ‘அஞ்சாதே’ நரேன், மியா ஜார்ஜ், அம்ஜத் மற்றும் அர்ஜுன் சிதம்பரம் ஆகியோர் நடித்து வருகின்றனர். அனிரூத்தின் இசை ‘ரம்’ படத்திற்கு முதுகெலும்பாக அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

“ரம் என்ற சொல்லுக்கு பொருள் மதுபானம் கிடையாது. பழங்காலத்து வார்த்தையான ‘ரம்’ என்ற சொல்லுக்கு ‘தீர்ப்பு’ என்பதே பொருள். சமீப காலமாகவே திகில் படங்கள் தமிழ் சினிமாவில் வரிசை கட்டி நின்று கொண்டிருக்கிறது. ஆனால் அவைகளில் இருந்து எங்களின் ‘ரம்’ திரைப்படம் முற்றிலும் தனித்து விளங்கும் என்பதை நான் முழுமையாக நம்புகிறேன்” என்கிறார் இளம் கதாநாயகன் ஹ்ரிஷிகேஷ்.

‘ரம்’ படத்தின் கதாநாயகன் ஹ்ரிஷிகேஷின் தாத்தாவும், கொள்ளு தாத்தாவும் பழங்காலத்து இயக்குனர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. “முழுக்க முழுக்க சினிமாவுடன் உறவில் இருக்க கூடிய குடும்பத்தில் பிறந்ததால்,

எனது சிறு வயதை ஸ்டுடியோவிலும், ரெகார்டிங் அரங்கிலும் தான் கழித்தேன். அதனால் தான் என்னவோ எனக்கு கேமரா முன் நிற்பதற்கு எந்த பயமோ, பதற்றமோ இருப்பதில்லை.

வேலை இல்லா பட்டதாரி படத்திற்கு பிறகு எனக்கு சில வாய்ப்புகள் வந்தன. ஆனால் வி ஐ பி எனக்கு அமைத்து கொடுத்த உறுதியான அடித்தளத்தை நான் சரியாக உபயோகிக்க வேண்டும் என்று கருதி இத்தனை நாட்கள் காத்திருந்தேன்.

அதன் பலனாக எனக்கு கிடைத்த ஒரு அற்புதமான வாய்ப்பு தான் இந்த ‘ரம்’ திரைப்படம்” என்று சொல்கிறார் இளம் நாயகன் ஹ்ரிஷிகேஷ்.

 


Post your comment

Related News
அடக் கடவுளே.. ரோட்டில் அப்பளம் விற்கும் பிரபல நடிகர் - அதிர்ச்சியாக்கும் புகைப்படம்.!
ஒரு நடிகரை காதலித்து கொண்டே இன்னொரு நடிகரை உடலுறவுக்கு அழைத்த பிரபல நடிகை.!
விஸ்வரூபம் எடுத்த நடிகையின் நிர்வாண புகைப்பட விவகாரம் - பிரபல நடிகர் அதிரடி கருத்து.!
காதலித்தும் திருமணம் செய்துக்கொள்ள முடியமால் போன நடிகர், நடிகைகள்!
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions