சுப்ரமணிய சிவா இயக்கும், ஹிட்லர் அல்லது ரசவாதி!

Bookmark and Share

சுப்ரமணிய சிவா இயக்கும், ஹிட்லர் அல்லது ரசவாதி!

தனுஷ், சாயா சிங் நடித்த திருடா திருடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் சுப்ரமணிய சிவா. முதல் படத்திலேயே ஒரு அதிரடியான கமர்ஷியல் ஹிட் படத்தை கொடுத்த சுப்ரமணிய சிவா, தொடர்ந்து பொறி, யோகி, சீடன் போன்ற படங்களை இயக்கினார். தற்போது உலோகம் என்ற படத்தை இயக்கி, நடித்து வருகிறார்.

இது ஜெயமோகன் எழுதிய நாவலை அடிப்படையாக கொண்டது. இப்படம் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் அடுத்தப்படியாக ஒரு படத்தை இயக்க உள்ளார். இப்படத்திற்கு ஹிட்லர் அல்லது ரசவாதி எனும் பெயர் வைத்திருக்கிறார்.  

இதில் ஹீரோவாக அட்டகத்தி தினேஷ் நடிக்கிறார். இப்படத்தில் காமெடி, சென்டிமென்ட், சீரியஸ் எனு அனைத்து விஷயங்களும் உள்ளதாம். முன்னதாக இப்படத்தின் கதையை தினேஷிடம் சொன்னபோது, உடனே ஒப்புக்கொண்டாராம்.

மேலும் படத்தில் நிறைய காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளாராம் சிவா. இந்தப்படம் மிகவும் வித்தியாசமாக இருக்கும், என் படங்கள் குடும்பத்தோடு பார்க்ககூடிய யதார்த்த படமாக இருக்கும்.

அதை இந்தப்படமும் அதை பிரதிபலிக்கும் என்று கூறுகிறார் சுப்ரமணிய சிவா. தற்போது படத்திற்கான ஹீரோயின், பிற நடிகர்கள் உள்ளிட்ட தேர்வு நடந்து வருகிறது. விரைவில் படம் பற்றிய அறிவிப்பு வளியாக இருக்கிறது.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions