ரூ 1300 கோடியில் உருவான டைட்டானிக் கிடைத்த வசூல் மட்டுமின்றி தெரியாத பல தகவல்கள்

Bookmark and Share

ரூ 1300 கோடியில் உருவான டைட்டானிக் கிடைத்த வசூல் மட்டுமின்றி தெரியாத பல தகவல்கள்


ஹாலிவுட் படங்கள் இந்தியாவில் தொடர்ந்து வரவேற்பு பெறுவது சாதரணம் தான். பாஸ்ட் அண்ட் ப்யூரிஸ் 7ம் பாகம் ரூ 100 கோடி வரை இந்தியாவில் வசூல் செய்தது.

அதேபோல் கடந்த வருடம் வந்த ஜங்கிள்புக் ரூ 200 கோடிக்கு மேல் இந்தியாவில் வசூல் செய்து சாதனை படைத்தது.

ஆனால், நேரடி இந்தியப்படங்களுக்கு இணையாக 100 நாட்களை கடந்து 20 வருடத்திற்கு முன்பே கோடியில் பிஸினஸ் செய்த படம் ஜேம்ஸ் கேமரூனின் டைட்டானிக் தான்.

பல ஆஸ்கர் விருதுகளை அள்ளிய டைட்டானிக் ரூ 1300 கோடி பொருட்செலவில் (இன்றைய இந்திய ரூபாய் மதிப்பில்) எடுக்கப்பட்டது.

இப்படத்தின் வசூல் உலகம் முழுவதும் சேர்த்து ரூ 21 ஆயிரம் கோடிகளை தாண்டியது, இன்று வரை உலக அளவில் அதிக வசூல் செய்த படங்களில் 20 வருடத்திற்கு முன்பு வந்த டைட்டானிக்கே இரண்டாம் இடத்தில் உள்ளது.

அவதார் படத்தை தவிர மற்ற எந்த படங்களாலும் இந்த சாதனையை முறியடிக்கமுடியவில்லை, இப்படத்தில் ஜாக், ரோஸ் கதாபாத்திரத்தில் Leonardo DiCaprio, Kate Winslet நடித்தனர்.

இந்த படத்திற்கு பிறகு இவர்கள் இருவரும் சேர்ந்து திருமணம் செய்யவுள்ளதாக பல வருடங்களாக வந்ததிகள் வந்தாலும், நாங்கள் நண்பர்கள் என்பதே இருவரின் பதிலும்.

மேலும், இப்படத்தில் முதலில் நடிக்க விருந்தது இண்டர்ஸ்டெல்லர் படத்தின் ஹீரோ Matthew McConaughey தான், பிறகு தான் ஒரு சில காரணங்களால் அவர் விலகி Leonardo DiCaprio நடித்திருந்தார்.

இப்படத்தில் வயதான தோற்றத்தில் ரோஸாக நடித்த Gloria Stuart மட்டுமே உண்மையாகவே டைட்டானிக் கப்பல் மூழ்கிய போது 1912ம் ஆண்டு உயிரோடு இருந்தவர்.

இந்த படத்தின் கிளைமேக்ஸ் முழுவதுமே தண்ணீரில் நடப்பது போல் தான் இருக்கும், கப்பல் மூழ்கும் காட்சியில் எல்லோரும் கடலில் மிதப்பார்கள், இவை அனைத்தும் ஒரு பிரமாண்ட நீச்சல் குளத்தில் செட் போட்ட எடுக்கப்பட்டது. அதன் செலவும் மட்டுமே ரூ 300 கோடியை தாண்டியது.

இந்த காட்சியில் நீண்ட நேரம் தண்ணியில் இருந்ததால் இப்படத்தின் நாயகி கேட் வின்ஸல்ட் pneumonia நோயால் பாதிக்கப்பட்டார்.

அதேபோல் கேட் ஒரு காட்சியில் நிர்வாணமாக படுத்திருப்பார் அதை, ஜாக் வரைவார், அப்படி படம் வரையும் போது காட்டப்படும் கைகள் ஜேம்ஸ் கேமரூனுடையது தான், ஆம், அவர் சிறந்த ஓவியரும் கூட.

உலகில் முதன் முறையாக ஒரு படம் திரையரங்கில் ஓடிக்கொண்டு இருக்கும் போதே அதிகாரப்பூர்வமாக விசிடி வந்தது இந்த படத்திற்கு தான்.

இப்படத்திற்கு இசையமைத்த ஜேம்ஸ் ஹார்னர் தற்போது உயிரோடு இல்லை என்பது வருத்தமான செய்தி.

இப்படி பல சாதனைகளையும், வேதனைகளையும் தாண்டி தான் டைட்டானிக் காலம் கடந்தும் மக்கள் மனதில் காவியமாக திகழ்கின்றது.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions