மோகன்லால் ஜோடியாக நடிக்கிறார் ஹனி ரோஸ்..!

Bookmark and Share

மோகன்லால் ஜோடியாக நடிக்கிறார் ஹனி ரோஸ்..!

கடந்த வருடம் ’ரிங் மாஸ்டர்’ படத்தில் திலீப்பிற்கு எதிராக வில்லித்தனம் காட்டிய ஹனிரோஸ், தற்போது ஜெயராம் நடிக்கும் ’ஸார் சி.பி’ (Sir CP) என்கிற படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார்.

மலையாளத்தில் சின்னச்சின்ன ரோலில் நடித்துக் கொண்டிருந்த ஹனிரோஸுக்கு ’த்ரிவேண்ட்ரம் லாட்ஜ்’, ’ஹோட்டல் கலிஃபோர்னியா’, ’அஞ்சு சுந்தரிகள்’ என வரிசையாக நடித்த படங்கள் எல்லாம் ஹிட்டாக, தற்போது மலையாளத்தில் முக்கியமான நடிகையாகிவிட்டார்.

அதன் அறிகுறிதான் முன்னணி நடிகர்களுடன்  அவர் தொடர்ந்து நடித்துவருவதும். மம்முட்டியுடன் ’தெய்வத்தின்டே ஸ்வந்தம் க்ளீட்டஸ்’ என்கிற படத்தில் இணைந்து நடித்த ஹனிரோஸ், மோகன்லாலுடன் ஒரு படத்திலாவது நடித்துவிடவேண்டும் என தனது ஆசையை கடந்தவாரம் தான் வெளிப்படுத்தியிருந்தார்.

அதற்குள் அவர் கோரிக்கை கேட்க வேண்டியவர்களுக்கு எப்படித்தான் கேட்டதோ தெரியவில்லை.. இப்போது மேஜர் ரவி இயக்கவுள்ள படத்தில் மோகன்லாலுக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு ஹனிரோசை தேடிவந்துள்ளது. இது மேஜர் ரவியின் வழக்கமான ஆக்சன் பாணியில் இல்லாமல் குடும்ப படமாக உருவாகிறது. 


Post your comment





Related News
நடிகைகளுக்கு பாலியல் தொல்லைகள்! புகார் கொடுத்த இளம் நடிகை
​'நெக்ஸ்ட் டோர் ​​கப்பிள்ஸ்​' எனும் திரைப்படத்தின் மூலம்​ இயக்குநராகும்​ ​ கலை இயக்குநர்...!
விஜய்க்குள் இருக்கும் இன்னொருவன்: சொல்கிறார் மாலா அக்கா
விஜய் படத்தில் விஜய் சேதுபதியின் சகோதரி
பவன் கல்யாண் படத்திலிருந்து வெளியேறிய நடிகை
முத்தக்காட்சி ஓகே தான்...! அதை ஏன் போஸ்டர் அடிச்சு ஓட்டணும்..?
ஹனிரோஸ் ஆசைப்பட்டது அவருக்கு கிடைச்சிருச்சு..!
நாலே நாளில் ரூ.50 கோடியை தாண்டியது \'என்னை அறிந்தால்\' வசூல்!
மீண்டும் படம் தயாரிக்கும் பெரோஸ்கான்!
பிரபல இயக்குநர் மீது கொலை குற்றசாட்டு - திருநங்கை ரோஸ் பரபரப்பு புகார்.








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions