ஹனிரோஸ் ஆசைப்பட்டது அவருக்கு கிடைச்சிருச்சு..!

Bookmark and Share

ஹனிரோஸ் ஆசைப்பட்டது அவருக்கு கிடைச்சிருச்சு..!

மலையாளத்தில் சின்னச்சின்ன ரோலில் நடித்துக் கொண்டிருந்தவர் தான் ஹனிரோஸ். தமிழில் 'சிங்கம்புலி' படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக கூட நடித்தார். ஒருகட்டத்தில் 'த்ரிவேண்ட்ரம் லாட்ஜ்',  'ஹோட்டல் கலிஃபோர்னியா', 'அஞ்சு சுந்தரிகள்' என வரிசையாக இவர் நடித்த படங்கள் எல்லாம் ஹிட் அடிக்க, மலையாளத்தில் முக்கியமான நடிகையாகிவிட்டார் ஹனிரோஸ்.

அதனால் இப்போது வரிசையாக இளைய தலைமுறை இயக்குனர்களின் படங்களாலும், ஜெயராம், சுரேஷ்கோபி என சீனியர் நடிகர்களின் படங்களாலும் நிரம்பிக் கிடக்கிறது ஹனிரோஸின் கால்சீட் டைரி.

'த்ரிவேண்ட்ரம் லாட்ஜ்' படத்திற்குப்பின் மிகவும் போல்டான கேரக்டர்களே இவரை தேடிவர ஆரம்பித்தன. இதனால் ஒருகட்டத்தில் போரடித்துப்போன ஹனிரோஸ் தான் ஆசைப்பட்டபடி பப்ளியான கேரக்டர் கிடைக்காதா என ஏங்க ஆரம்பித்தார்.

தற்போது ரூபேஷ் பீதாம்பரன் இயக்கிவரும் 'யூ ட்டூ புரூட்டஸ்' படத்தில் அவர் ஆசைப்பட்டபடியே ஒரு கேரக்டர் கிடைத்துள்ளதாம். இதில் சினிமாவில் சான்ஸ் தேடுபவராக நடிக்கிறார் ஹனிரோஸ்.. இது தவிர 'மை காட்' படத்தில் டாக்டராகவும், 'சர் சி.பி' படத்தில் ஜெயராம் ஜோடியாக அவரது பி.ஏ.வாகவும் நடித்துவருகிறார் ஹனிரோஸ்.. 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions