இயக்குநர் தேஜாவின் அடுத்த படம் “ஹோரா ஹோரா”

Bookmark and Share

இயக்குநர் தேஜாவின் அடுத்த படம் “ஹோரா ஹோரா”

இயக்குநர் என்ற பெயரைவிட வெற்றிப்பட இயக்குநர் என்ற பெயரை தக்கவைத்துக் கொள்வதுதான் குதிரை கொம்பாக இருக்கிறது சினிமா உலகில். சினிமாவில் பல வெற்றிகளை தந்த இயக்குநர் தேஜாவுக்கும் சில சறுக்கல்களை சமீபத்தில் ஏற்பட்டது இவரின் இயக்கத்தில் கடைசியாக வந்த சில படங்கள் வசூலில் மந்தமாகவே காணப்பட்டது.

ஆனால் அதனையெல்லாம் மனதில் வைத்துக் கொள்ளாமல் மீண்டும் அவரின் அடுத்த படத்திற்கான வேலைகளில் பிசியாக இறங்கிவிட்டார் தேஜா. முற்றிலும் புதுமுகங்கள் நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே கர்நாடகாவில் தொடங்கிவிட்டது.

கல்யாண் கொடூரி இசையமைக்கும் இந்த படம் ஒரு மியூசிக்கல் த்ரில்லர் படமாக உருவாகிக் கொண்டிருக்கிறதாம். படத்திற்கு ”ஹோரா ஹோரா” என்று பெயர் வைத்துள்ளார் இயக்குநர் தேஜா.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions