ஹிருத்திக் ரோஷனை கைது செய்ய வேண்டும்: கங்கனா ரணாவத் புகார்

Bookmark and Share

ஹிருத்திக் ரோஷனை கைது செய்ய வேண்டும்: கங்கனா ரணாவத் புகார்

பிரபல இந்தி நடிகர் ஹிருத்திக் ரோஷனும், நடிகை கங்கனா ரணாவத்தும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்தனர். இந்த நிலையில், அவர்கள் இருவரும் சமீபத்தில் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர்.

இதைத்தொடர்ந்து, ஹிருத்திக் ரோஷனை விமர்சித்து சமூக வலைத்தளத்தில் கங்கனா ரணாவத் சில பதிவுகளை வெளியிட்டார். இது தொடர்பாக அவர்கள் இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதன் காரணமாக இருவரும் மாறி, மாறி வக்கீல் நோட்டீசு அனுப்பிக் கொண்டனர்.

இந்த சூழலில், தன்னுடன் எடுத்துக்கொண்ட தனிப்பட்ட புகைப்படங்கள் மற்றும் அவ்வப்போது பரிமாறிக் கொண்ட இ-மெயில்களை ஊடகத்தினரிடம் ஹிருத்திக் ரோஷன் கசிய விட்டு விட்டதாகவும், இதனால் அவரை கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்குமாறும் மும்பை போலீஸ் கமிஷனர் தத்தா பட்சல்கிகரிடம் 29 வயது நடிகை கங்கனா ரணாவத் தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த புகாரை கங்கனா ரணாவத்தின் வக்கீல் ரிஸ்வான் சித்திக் அனுப்பியுள்ளார். இதுபற்றி அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

கங்கனா ரணாவத், ஹிருத்திக் ரோஷனுடன் இருக்கும் புகைப்படங்களை வேண்டுமென்றே தீங்கிழைக்கும் நோக்கத்தில், அவர் ஊடகத்திடம் கசிய விட்டு அவரது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துகிறார். ஆகையால், குற்றவியல் நடைமுறை சட்டப்பிரிவு 151-ன்கீழ் ஹிருத்திக் ரோஷனை கைது செய்ய வேண்டும்.

இவ்வாறு வக்கீல் ரிஸ்வான் சித்திக் தெரிவித்தார்.

இருப்பினும், இந்த புகாரை திட்டவட்டமாக மறுத்த ஹிருத்திக் ரோஷனின் வக்கீல் திபேஷ் மேத்தா, கங்கனா ரணாவத்தும், அவரது வக்கீலும் குற்றம்சாட்டும் விதத்தில் எந்த ஒரு தவறான செயலிலும் ஹிருத்திக் ரோஷன் ஈடுபட்டதில்லை என்றார்.


Post your comment





Related News
பெரிய நடிகர்கள் நடிக்க யோசித்த கதையில் நான் புதுமுகத்தை அறிமுகம் செய்கிறேன் இயக்குனர் சுசீந்திரன் – ஜீனியஸ் பத்திரிகையாளர் சந்திப்பு
அடுத்த ஐந்து வருடத்திற்கு இவர் தான் பிரதமர்! பிரபல நடிகையின் அதிரடி
பாகுபலி பாணியில் உருவாகியுள்ள மோகன்லால், நிவின் பாலியின் காயம்குளம் கொச்சூன்னி.!
நிவின் பாலி படத்துக்கு வசனம் எழுதும் மதன் கார்கி..!
அழகு நாயகன் ரித்திக் ரோஷனா இது? - ரசிகருக்கு அதிர்ச்சியுள்ளாக்கிய புகைப்படம்.!
தமிழில் பிரபல நடிகருடன் நடிக்க ஆசைப்படும் சரவணன் மீனாட்சி புகழ் ரச்சிதா- அது யார் தெரியுமா?
500 கிலோ பெண்ணின் ஆசையை நிறைவேற்றுவாரா ஹிரித்திக் ரோஷன்?
திருமணமான ஹீரோவுடன் காதல்: நடிகையை மிரட்டிய பெரும்புள்ளிகள்
முதுகெலும்பு காணாப் போச்சா, தேடித் தரட்டா: பிரபல நிறுவனத்தை விளாசிய ஹீரோ
இந்த வார பாலிவுட் படங்களின் பாக்ஸ் ஆபிஸை வசூல் தெரியவேண்டுமா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions