ஹிருத்திக் ரோஷனுடன் நடிகை நேகா துபியா காதல்

Bookmark and Share

ஹிருத்திக் ரோஷனுடன் நடிகை நேகா துபியா காதல்

இந்தி பட உலகில் முன்னணி கதாநாயகனாக இருக்கும் ஹிருத்திக் ரோஷனுக்கு 42 வயது ஆகிறது. இவருக்கும் பழம்பெரும் நடிகர் சஞ்சைகானின் மகள் சுஷானேவுக்கும் 2000-ம் ஆண்டில் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஹிரேகான், ஹிரிதான் என்று 2 மகன்கள் உள்ளனர்.

மகிழ்ச்சியாக கழிந்த இவர்கள் குடும்ப வாழ்க்கையில் 2013-ம் ஆண்டு புயல் வீசியது. இருவரும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தார்கள். 2014-ம் ஆண்டு விவாகரத்தும் செய்து கொண்டார்கள்.

தற்போது ஹிருத்திக் ரோஷன் தனியாக வசித்து வருகிறார். படங்களிலும் தீவிரமாக நடிக்கிறார். இந்த நிலையில் ஹிருத்திக் ரோஷனுக்கும் இந்தி நடிகை கங்கனா ரணாவத்துக்கும் நெருக்கம் ஏற்பட்டது. சுஷானே பிரிவதற்கு இவர்கள் நெருக்கமும் காரணம் என்று கூறப்பட்டது.

ஆனால் சில மாதங்களுக்கு முன்பு இவர்களின் காதலிலும் விரிசல் விழுந்தது. இருவரும் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டினார்கள்.
இதற்கிடையில் ஹிருத்திக் ரோஷனுக்கும், நடிகை நேகா துபியாவுக்கும் தற்போது காதல் மலர்ந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நேகா துபியா கேரளாவை சேர்ந்தவர். இவருக்கு 36 வயது ஆகிறது. மலையாளம், தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து வருகிறார்.

ஹரித்திக் ரோஷனும், நேகா துபியாவும் சமீபத்தில் ஒரு கலை நிகழ்ச்சிக்கு ஒன்றாக சென்றதாகவும் அப்போது அவர்களுக்குள் நெருக்கம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இருவரும் ஜோடியாக சுற்றி வருகிறார்கள். அவர்கள் கட்டிப் பிடித்துக்கொண்டு நிற்பது போன்ற படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன.

இந்த காதல் கிசுகிசுவுக்கு இருவரும் பதில் சொல்லாமல் மவுனம் காத்து வருகிறார்கள். 


Post your comment





Related News
பெரிய நடிகர்கள் நடிக்க யோசித்த கதையில் நான் புதுமுகத்தை அறிமுகம் செய்கிறேன் இயக்குனர் சுசீந்திரன் – ஜீனியஸ் பத்திரிகையாளர் சந்திப்பு
அடுத்த ஐந்து வருடத்திற்கு இவர் தான் பிரதமர்! பிரபல நடிகையின் அதிரடி
பாகுபலி பாணியில் உருவாகியுள்ள மோகன்லால், நிவின் பாலியின் காயம்குளம் கொச்சூன்னி.!
நிவின் பாலி படத்துக்கு வசனம் எழுதும் மதன் கார்கி..!
அழகு நாயகன் ரித்திக் ரோஷனா இது? - ரசிகருக்கு அதிர்ச்சியுள்ளாக்கிய புகைப்படம்.!
தமிழில் பிரபல நடிகருடன் நடிக்க ஆசைப்படும் சரவணன் மீனாட்சி புகழ் ரச்சிதா- அது யார் தெரியுமா?
500 கிலோ பெண்ணின் ஆசையை நிறைவேற்றுவாரா ஹிரித்திக் ரோஷன்?
திருமணமான ஹீரோவுடன் காதல்: நடிகையை மிரட்டிய பெரும்புள்ளிகள்
முதுகெலும்பு காணாப் போச்சா, தேடித் தரட்டா: பிரபல நிறுவனத்தை விளாசிய ஹீரோ
இந்த வார பாலிவுட் படங்களின் பாக்ஸ் ஆபிஸை வசூல் தெரியவேண்டுமா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions