‘காலா’ பட ரகசியத்தை வெளியிட்ட ஹூமாகுரேஷி

Bookmark and Share

‘காலா’ பட ரகசியத்தை வெளியிட்ட ஹூமாகுரேஷி

ரஜினியின் ‘காலா’ படப்பிடிப்பு கடந்த 28-ந்தேதி தொடங்கியது. பா.ரஞ்சித் இயக்கும் இதன் படப்பிடிப்பு மும்பையில் தொடர்ந்து நடைபெறுகிறது. தினமும் ரஜினியை பார்க்க பெரும் கூட்டம் வருவதால், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் படப்பிடிப்பு நடந்து வருகிறது.

முதலில் ரஜினி, சமுத்திரக்கனி உள்ளிட்டவர்கள் நடித்த புகைப்படங்கள் வெளியாகின. அடுத்து ரஜினி பேசிய பஞ்ச் வசனம் வெளியானது. இந்த படத்தின் நாயகியாக நடிக்கும் இந்தி நடிகை ஹூமாகுரேஷி பற்றி பல்வேறு தகவல்கள் வெளியாகின.

ஆனால் ‘காலா’ படத்தில் அவருக்கு என்ன வேடம் என்பது ரகசியமாக இருந்தது. இப்போது அதையும் ஹூமாகுரேஷி போட்டு உடைத்திருக்கிறார்.. இதுபற்றி டுவிட்டரில் தெரிவித்துள்ள அவர், ‘காலா’ படத்தில் எனது பெயர் ஜரீனா.

நான் ஜரீனாவாக மாறிக் கொண்டிருக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.அத்துடன் விடவில்லை. அவருக்கு நடிப்பதற்காக கொடுக்கப்பட்ட காட்சி பற்றிய குறிப்பு அடங்கிய பேப்பர்களையும் புகைப்படம் எடுத்து டுவிட்டரில் வெளியிட்டிருக்கிறார்.

அவர் வெளியிட்டுள்ள படத்தில் காலா பீம்ஜியுடன் பைக்கில் செல்வதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இவர் மூலம் இன்னும் ஏராளமான தகவல்கள் வெளியாகலாம் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.


Post your comment





Related News
66 வயது ரஜினிக்கு ஜோடியாகும் பாலிவுட் நடிகை ஹூமா குரேஷியின் வயது தெரியுமா?
தனது சகலைக்காக ரகுமான் செய்யும் உதவி!
ஒரேநாளில் வெளியாகும் கபாலி, பாகுபலி!
எனக்கு வயதாகி விட்டது: மனம் திறக்கிறார், ஏ.ஆர். ரஹ்மான் பேட்டி
பிரிட்டன் நாட்டில் ஏ.ஆர்.ரஹ்மானின் இன்ட்டிமேட் இசை விழா
சுந்தர்.சி-யை வாழ்த்திய ஏ.ஆர்.ரகுமான்
பிரம்மாண்ட படத்தில் பணியாற்றுவதை உறுதிசெய்த ஏ.ஆர்.ரகுமான்!
மீண்டும் 2.0 படப்பிடிப்பில் இணையும் ரஜினி!
சுந்தர் சி-யின் பிரம்மாண்ட படத்தில் இணைந்த பாகுபலி, 2.o கலைஞர்கள்!
சுந்தர்.சியுடன் முதல் முறையாக இணையும் ஏ.ஆர்.ரகுமான்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions