வில்லி, கொடிய பெண் சசிகலா.. சரமாரியாக வசை பாடிய ஜெ.விசுவாசி ஹுசைனி

Bookmark and Share

வில்லி, கொடிய பெண் சசிகலா.. சரமாரியாக வசை பாடிய ஜெ.விசுவாசி ஹுசைனி

ஜெயலலிதாவின் தீவிர விசுவாசியான ஹுசைனி கொடூரமான வில்லி, உலகிலேயே கொடியப்பெண் என சசிகலாவை சரமாரியாக வசைப்பாடினார். நேரலை நிகழ்ச்சியில் அவர் இவ்வாறு பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது. 

கராத்தே வீரரான ஹுசைனி முதல்வர் ஓபிஎஸின் அணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். முதல்வர் இல்லம் அருகே இருந்தப்படியே அவர் புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு பேட்டியளித்தார்.

அப்போது அவர் சசிகலாவை கடுமையாக விமர்சனம் செய்தார். சரமாரியாக சசிகலாவை ஹுசைனி வசைப்பாடினார். அவர் கூறியதாவது, எந்த ஒரு பெண்ணையும் யாரும் இப்படி வெறுத்திருக்க மாட்டார்கள்.

சசிகலா ஒரு வில்லி, மிகக்கொடியப் பெண் அவர் என ஹுசைனி சசிகலாவை கடுமையாக விளாசினார். இதனால் அதிர்ந்துப் போன நிகழ்ச்சி தொகுப்பாளர் நாகரிகமான வார்த்தைகளை பயன்படுத்துமாறு அறிவுறுத்தினார். 

இதையடுத்து அவர் ஓபிஎஸ்க்கு ஆதரவு தெரிவித்து தனது பேச்சை தொடங்கினார். ஏற்கனவே ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறிய ஹுசைனி மன்னார்குடி கும்பல்தான் ஜெயலலிதா மரணத்துக்கு காரணம் என குற்றம்சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions