ஹைதராபாத்தில் உத்தமவில்லன் படக்குழுவினர்!

Bookmark and Share

ஹைதராபாத்தில் உத்தமவில்லன் படக்குழுவினர்!

கமல்ஹாசனின் உத்தம வில்லன் ஏப்ரல் மாதம் 17 ஆம் தேதி உலகம் முழுக்க வெளியாக இருக்கிறது.  உத்தம வில்லன் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையிலுள்ள டிரேட் சென்டரில் நடந்தது.

இந்த நிகழ்ச்சி சென்ற வாரம் ஜெயா டி.வி.யில் ஒளிபரப்பானது! தமிழில் மட்டுமின்றி, தெலுங்கிலும் தயாரிக்கப்பட்டுள்ள உத்தமவில்லன் இரண்டு மொழிகளிலும் ஒரே நேரத்தில் ரிலீசாகவிருக்கிறது.

எனவே உத்தமவில்லன் படத்தின் தெலுங்குப்பதிப்புக்கான புரமோஷனை தீவிரப்படுத்தி உள்ளனர். முதல் கட்டமாக இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று மாலை ஹைதராபாத்திலுள்ள ஷில்பகலா வேதிகா இன்டோர் ஆடிட்டோரியத்தில் நடைபெறவிருக்கிறது.

இதற்கான ஏற்பாடுகளை பிரம்மாண்டமான முறையில் செய்துள்ளார்கள். இந்த இசைவெளியீட்டு விழாவில் கலந்து கொள்வதற்காக கமல்ஹாசன், இயக்குனர் ரமேஷ் அரவிந்த், திருப்பதி பிரதர்ஸ் லிங்குசாமி, தயாரிப்பாளர் சுபாஷ் சந்திரபோஸ், இசை அமைப்பாளர் ஜிப்ரான் உட்பட உத்தம வில்லன் படக் குழுவினர் ஹைதராபத் புறப்பட்டு சென்றுள்ளனர்.  

ஹைதராபாத் விழாவை முடித்துவிட்டு வந்த பிறகு இன்னும் சில நாட்களில் கேரளாவுக்கு சென்று புரமோஷன் நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிட்டுள்ளனர்.


Post your comment





Related News
நயன்தாராவுக்கு வில்லனாக நடித்தது மிகப்பெரிய அந்தஸ்து: புதுமுக வில்லன் நடிகர்
அஜித் படத்துக்கு வில்லன் ரெடி
ஒரே வருடத்தில் 4 படங்களில் நடித்து சாதித்த உலக நாயகன்
உத்தம வில்லனுக்கு சர்வதேச திரைப்பட விழாவில் ஐந்து விருதுகள்
உத்தமவில்லன் படம் ஆன்லைனில் வெளியீடு
ரசிகர்கள் பற்றி கவலை இல்லை
இந்த வாரம் சிறு படங்களின் வாரம்
3 மணி நேரம் ஓடும் உத்தமவில்லன்!
\'உத்தம வில்லன்\' முதல் நாள் ரிப்போர்ட்...
உத்தமவில்லன் படத்தில் 15 நிமிட காட்சிகள் குறைப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions