நஸ்மா பிக்சர்ஸ் சார்பில் அயாஸ்கான் தயாரிக்கும் படத்துக்கு ஐயங்கன் என பெயரிடப்பட்டு உள்ளது.

Bookmark and Share

நஸ்மா பிக்சர்ஸ் சார்பில் அயாஸ்கான் தயாரிக்கும் படத்துக்கு ஐயங்கன் என பெயரிடப்பட்டு உள்ளது.

இதில் நாயகனாக நவ்சத்கான் , ,விவேக் கிருஷ்ணா , நாயகியாக பூர்ணிமா அறிமுகமாகின்றனர். மேலும்  பல முன்னணி நடிகர், நடிகைகளும் நடிக்கின்றனர். இப்படத்தை தனுஷ் பாண்டியன் இயக்குகிறார். 

ஐயங்கன் என்பது நம்மை சுற்றி இருக்கும் ஒரு அமானுஷ்ய பொருள். பெரிய மந்திரவாதியாக வேண்டும் என்ற ஆசையில் குறிப்பிட்ட நட்சத்திரத்தில் இருக்கும் பெண்ணை நரபலி கொடுக்க ஒருவன் முயற்சிக்கிறான்.

இதற்காக அப்பெண்ணை தேடி அலைகிறான். அவளை அந்த மந்திரவாதி கண்டுபிடித்து கடத்துகிறான். இதனால் அவள் காதலன் அதிர்ச்சியாகிறான். மேஜிக் நிபுணரான அவன் தனதுமேஜிக் வித்தைகள் மூலம் மந்திரவாதியிடம் இருந்து காதலியை மீட்டானா? இல்லையா? என்பது கதை.

படப்பிடிப்பு சென்னை  கிழக்கு  கடற்கரை  சாலையில் நடக்க இருக்கிறது , பைக் பயணத்திலேயே  பெருமபான்மையான  காட்சிகள்  எடுக்கப்படுகிறது ,பைக்  ஓட்டும் வீரர்களாக  கதாநாயகர்கள் நடித்தாலும்  நிஜத்திலும் பைக் ஓட்டும் வீரர்களாக  இருப்பது படத்துக்கு இன்னும் கூடுதல் பலம் என்கிறார் இயக்குனர்  தனுஷ் பாண்டியன் .


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions