இடிக்கப்படும் இப்ராகிம் இராவுத்தர் வீடு!

Bookmark and Share

இடிக்கப்படும் இப்ராகிம் இராவுத்தர் வீடு!

விஜயகாந்தின் வெற்றிக்கு அவரது திறமை உட்பட பல காரணங்கள் இருந்தாலும், அவை எல்லாவற்றையும்விட மிக முக்கியமான காரணம்... அவரது நண்பரான இப்ராகிம் ராவுத்தர்தான். சினிமா ஆசையில் விஜயராஜ், மதுரையிலிருந்து புறப்பட்டு சென்னைக்கு வந்தபோது அவருடன் வந்தவர்தான் இப்ராகிம் ராவுத்தர்.

தன் பால்ய நண்பனான விஜய்ராஜுக்காக எத்தனையோ போராட்டங்களை சந்தித்தவர்.

எத்தனையோ தியாகங்களை செய்தவர். விஜய்ராஜ் பிற்காலத்தில் விஜயகாந்த் ஆகி முன்னணி ஹீரோவாக உயர்ந்தபோது அவருக்கு நண்பராக மட்டுமின்றி, நல்ல ஆலோசராக, மானேஜராக இருந்து விஜயகாந்தை வழி நடத்தியவர் இந்த இப்ராகிம் ராவுத்தர்தான். விஜயகாந்த் முன்கோபக்காரர்.

அதனால் ஏற்படும் பிரச்சனைகளை சமாளித்து பக்குவமாக கையாண்டு விஜயகாந்தைக் காத்தவர் இப்ராகிம் ராவுத்தர். விஜய்காந்துக்கு திருமணம் ஆகும் வரை அவருக்கு ஆல் இன் ஆல் இப்ராகிம் ராவுத்தர்தான். அவர் கிழித்த கோட்டைத்தாண்ட மாட்டார். இப்படியாக நகமும் சதையுமாக இருந்த இப்ராகிம் ராவுத்தரும் விஜயகாந்தும் ஒருகட்டத்தில் பிரிந்தனர்.

திருமணத்துக்குப் பிறகு என் வழி தனி வழி என்று இப்ராகிம் ராவுத்தரைப் பிரிந்து போனார் விஜயகாந்த். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக கிட்னி மற்றும் இதயக்கோளாறு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் இப்ராகிம் ராவுத்தர். உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள அவரை பார்க்க சமீபத்தில் மருத்துவமனைக்கு சென்றார்.

நினைவில்லாமல் இருந்த இப்றாகிம் ராவுத்தரை பார்த்துவிட்டு திரும்பினார். இதற்கிடையில் விஜயகாந்தின் வீட்டுக்கு அருகில் உள்ள இப்ராகிம் ராவுத்தரின் வீடு இடிக்கப்பட்டு வருகிறது. அவரது மருத்துவ செலவுக்கு பணமில்லாமல் இப்ராகிம் ராவுத்தர் வீட்டை விற்றுவிட்டதாகவும் சொல்லப்படுகிறது.


Post your comment





Related News
ஜீவா-திஷாபாண்டே ஜோடியாக நடிப்பில் திகில் நகைச்சுவை படம் " கொம்பு"
இப்ராஹிம் ராவுத்தருக்கு கேப்டன் விஜயகாந்த் இரங்கல் அஞ்சலி செலுத்தினார்
தயாரிப்பாளர் இப்ராஹிம் ராவுத்தர் காலமானார்
தாவூத் இப்ராஹீம் பெயரில் உருவாகும் மலையாளப்படம்..!
எஸ்ஏசிக்கு எதிரான‌ வழக்கை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions