உலக கோப்பை கிரிக்கெட் துவக்கம்: தமிழ் சினிமா கலக்கம்

Bookmark and Share

உலக கோப்பை கிரிக்கெட் துவக்கம்: தமிழ் சினிமா கலக்கம்

4 ஆண்டுகளுக்கு ஒரு முறை சினிமாவுக்கு ஒரு சோதனைகாலம் வரும். அது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி. இன்றைய காலகட்டத்தில் தியேட்டருக்கு வந்து சினிமா பார்க்கிறவவர்கள் 15 முதல் 25 வயது வரையிலான இளைஞர்கள்தான்.

இவர்களில் 90 சதகிவிதம் பேர் கிரிக்கெட் ரசிகர்களாக இருக்கிறார்கள். இன்று (ஜன 14) தொடங்கியுள்ள உலககோப்பை கிரிக்கெட் மார்ச் 23 வரை நடக்கிறது. இளைஞர்களின் கவனமும் முழுக்க முழுக்க கிரிக்கெட்டில்தான் இருக்கும். தியேட்டர் பக்கம் வரமாட்டார்கள். இது கடந்த காலத்தின் அனுபவம்.

தற்போதும் கிரிக்கெட்டின் மீதான ஆர்வம் கொஞ்சம்கூட குறையவில்லை. அதிலும் இந்தியா மோதும் போட்டிகளின்போது தியேட்டர்கள் காற்று வாங்கும். இந்த ஆண்டு நடக்கும் போட்டியில் இந்தியா பிப்ரவரி 15ந் தேதி பாகிஸ்தானுடனும், 22ந் தேதி தென் ஆப்பிரிக்காவுடனும், 28ந் தேதி அரபு எமிரெட்சுடனும், மார்ச் 6ந் தேதி வெஸ்ட் இண்டீசுடனும், 10ந் தேதி அயர்லாந்துடனும், 14ந் தேதி ஜிம்பாவேயுடனும் மோதுகிறது.

இந்த சூழ்நிலையில் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடக்கும் காலகட்டத்தில் பெரிய பட்ஜெட் படங்கள் வெளியீடு இருக்காது. சிறு பட்ஜெட் படங்கள் வழக்கம்போல் வெளிவரும்.

அதிலும் இந்தியா தொடர்ந்து வெற்றிகளை குவித்து வந்தால் கிரிக்கெட்டை விரும்பாதவர்கள்கூட அந்தப் பக்கம் திரும்பி விடுவார்கள். ஒரு வேளை இந்தியா தோற்று காலிறுதி, அரையிறுதி என்று போகாவிட்டால் கிரிக்கெட் ஆர்வம் குறைந்து தியேட்டர் பக்கம் திரும்புவார்கள். எப்படி இருந்தாலும் சினிமாவுக்கு இது சோதனைக் காலம்தான்.


Post your comment





Related News
உலகம் முழுவதும் பாகுபலி படம் இத்தனை திரையரங்குகளில் வெளியாகிறதா- அதிர்ந்த திரையுலகம்
வேர்ல்டு ஹீரோ, நடிகை ஜோடியை பிரித்தது யார் தெரியுமா?
இன்று உலகம் முழுவதும் 1000 அரங்குகளுக்கு மேல் பைரவா ரிலீஸ்!
உலகளவில் தோனியின் பிரம்மாண்ட வசூல் எவ்வளவு தெரியுமா?
உலக திரைப்பட விழாவில் பங்கேற்கும் சூர்யா படம்
உலகம் முழுவதிலும் வசூலில் தனி வரலாறு படைத்த கபாலி!
87 ஆண்டுகளுக்கு முந்தைய டிஸ்னி திரைப்படம் கண்டுபிடிப்பு
தமிழ்ப் படங்களை மிஞ்சும் ஜுராசிக் வேர்ல்டு!
ஜுராசிக் வேர்ல்டு படத்தின் உலக வசூல் சாதனை
பள்ளி குழந்தைகளுக்கு உலக இசை சினிமா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions