இடம் பொருள் ஏவல் படத்தில் பொட்டு சுரேஷ்!?

Bookmark and Share

இடம் பொருள் ஏவல் படத்தில் பொட்டு சுரேஷ்!?

தென்மேற்கு பருவகாற்று, நீர்ப்பறவை ஆகிய படங்களை இயக்கிய சீனுராமசாமி தற்போது இடம் பொருள் ஏவல் என்ற படத்தை இயக்கி வருகிறார். சீனுராமசாமியின் முந்தைய படங்களில் கதாநாயகர்களாக நடித்த விஜய் சேதுபதி, விஷ்ணு இருவரையும் இப்படத்தில் இணைந்து நடிக்க வைத்திருக்கிறார்.

லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இடம் பொருள் ஏவல் படத்திற்கு  யுவன் சங்கர்ராஜா இசையமைக்க, வைரமுத்து பாடல் எழுதுகிறார். இந்த காம்பினேஷனின் மூலம் இடம் பொருள் ஏவல் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தினார்கள்.. இடம் பொருள் ஏவல் படம் விரைவில் வெளியாக இருக்கிறது.

இந்நிலையில் இப்படம் குறித்து பரபரப்பு தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது. அதாவது, கடந்த சில வருடங்களுக்கு முன் மதுரையில் கொல்லப்பட்ட பொட்டு சுரேஷின் கதையை அடிப்படையாக வைத்தே இடம் பொருள் ஏவல் படத்தின் கதையை உருவாக்கி இருக்கிறார்களாம்.  

மு.க.அழகிரியின் முக்கிய விசுவாசியாக இருந்தவர் பொட்டு சுரேஷ். அவரது அரசியல் எதிரிகளால் சில வருடங்களுக்கு முன் கொடூரமாக கொல்லப்பட்டார். அரசியல்வாதியாகவும் இருந்தபடி கட்டப்பஞ்சாயத்து, அடிதடி என வாழ்ந்த பொட்டு சுரேஷின் வாழ்க்கையில் நடைபெற்ற முக்கிய சம்பவங்களை தொகுத்து இடம் பொருள் ஏவல் படத்துக்கு கதையாக்கினார்களாம்.

பொட்டு சுரேஷின் கதை என்பதால் இந்தப்படத்துக்கு சீனு ராமசாமி முதலில்  பொட்டு என்று பெயர் வைத்திருக்கிறார். இந்த தலைப்பை வைத்தால் பொட்டு சுரேஷ் கதை என்பது வெட்டவெளிச்சமாகிவிடும் என்று வைரமுத்து போன்றவர்கள் அட்வைஸ் செய்ததால், அதன் பிறகே இடம் பொருள் ஏவல் என்ற தலைப்பை வைத்தாராம் இயக்குநர் சீனு ராமசாமி. 


Post your comment





Related News
"எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்" படத்தை பார்த்து வியந்து மொத்தமாக வாங்கிய கிளாப் போர்டு வி.சத்யமூர்த்தி..
விரைவில் வெளியாகும் இடம் பொருள் ஏவல்!
விஜய்சேதுபதி பேசாத பாத்திரம்!
இன்னும் சில வாரங்களில் இடம்பொருள் ஏவல்
இடம்பொருள் ஏவலைத் தொடர்ந்து ஆரஞ்சு மிட்டாய்!
இன்னும் சில வாரத்தில்... இடம் பொருள் ஏவல்.!
76 நாட்களில்... 6.5 கோடி பட்ஜெட்டில்... இடம் பொருள் ஏவல்!
இடம் பொருள் ஏவல் படத்தின் டிரைலர் ஏப்ரல் 23ம் தேதி வெளியீடு
மே மாதத்துக்கு சென்ற இடம் பொருள் ஏவல், இந்தியா பாகிஸ்தான்!
தொடங்கியது இடம் பொருள் ஏவலின் டப்பிங் பணிகள்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions