இடம் பொருள் ஏவல் படத்தின் டிரைலர் ஏப்ரல் 23ம் தேதி வெளியீடு

Bookmark and Share

இடம் பொருள் ஏவல் படத்தின் டிரைலர் ஏப்ரல் 23ம் தேதி வெளியீடு

‘நீர்ப்பறவை’ படத்திற்குப் பிறகு சீனு ராமசாமி இயக்கிவரும் படம் ‘இடம் பொருள் ஏவல்’. இதில் விஜய் சேதுபதி, விஷ்ணு, நந்திதா, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நடித்துள்ளனர். மேலும் வடிவுக்கரசி முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் இப்படத்தைத் தயாரித்திருக்கிறது.

சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி ‘தென்மேற்கு பருவக்காற்று’ என்ற படத்திலும், விஷ்ணு ‘நீர்ப்பறவை‘ என்ற படத்திலும் ஏற்கெனவே நடித்துள்ளார்கள். இவர்கள் இருவரும் ‘இடம் பொருள் ஏவல்’ படம் மூலம் இணைந்திருக்கிறார்கள்.

இப்படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இவருடைய இசையில் வெளியான பாடல்கள் அனைத்தும் ஏற்கனவே ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றுள்ள நிலையில், தற்போது இப்படத்தின் டிரைலரை ஏப்ரல் 23ம் தேதி மாலை 6 மணிக்கு வெளியிடவுள்ளனர். விரைவில் படத்தை வெளியிடவும் படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். 


Post your comment





Related News
"எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்" படத்தை பார்த்து வியந்து மொத்தமாக வாங்கிய கிளாப் போர்டு வி.சத்யமூர்த்தி..
விரைவில் வெளியாகும் இடம் பொருள் ஏவல்!
விஜய்சேதுபதி பேசாத பாத்திரம்!
இன்னும் சில வாரங்களில் இடம்பொருள் ஏவல்
இடம்பொருள் ஏவலைத் தொடர்ந்து ஆரஞ்சு மிட்டாய்!
இன்னும் சில வாரத்தில்... இடம் பொருள் ஏவல்.!
76 நாட்களில்... 6.5 கோடி பட்ஜெட்டில்... இடம் பொருள் ஏவல்!
மே மாதத்துக்கு சென்ற இடம் பொருள் ஏவல், இந்தியா பாகிஸ்தான்!
இடம் பொருள் ஏவல் படத்தில் பொட்டு சுரேஷ்!?
தொடங்கியது இடம் பொருள் ஏவலின் டப்பிங் பணிகள்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions