மே மாதத்துக்கு சென்ற இடம் பொருள் ஏவல், இந்தியா பாகிஸ்தான்!

Bookmark and Share

மே மாதத்துக்கு சென்ற இடம் பொருள் ஏவல், இந்தியா பாகிஸ்தான்!

தென்மேற்கு பருவக்காற்று, நீர்ப்பறவை படங்களை இயக்கிய சீனுராமசாமி, அதையடுத்து இயக்கியுள்ள படம் இடம் பொருள் ஏவல். இந்த படத்தில் அவரது முதல் படநாயகனான விஜயசேதுபதியும், இரண்டாவது பட நாயகனான விஷ்ணுவும் இணைந்து நடித்துள்ளனர்.

ஆரம்பத்தில் இந்த படத்தில் விஜயசேதுபதிக்கு ஜோடியாக கமிட்டான மனீஷாயாதவ் சில பிரச்சினைகள் செய்ததால் சர்ச்சைகள் ஏற்பட்டது. ஆனபோதும், அதையடுத்து நடந்த சில பஞ்சாயத்துக்களுக்குப் பிறகு அவரை படத்தில் இருந்தே நீக்கிய சீனுராமசாமி, அவருக்கு பதிலாக அட்டகத்தி நந்திதாவை புக் பண்ணி வேகமாக படப்பிடிப்பை நடத்தினார்.

ஆனால் சில மாதங்களில் அவர் படப்பிடிப்பை முடித்து விட்டார் என்றபோதும், அந்த சமயத்தில் விஜயசேதுபதி நடிப்பில் வெளியான வன்மம் படம் தோல்வியடைந்ததால் இடம்பொருள் ஏவல் படத்தை சரியான நேரம் பார்த்துதான் வெளியிட வேண்டும் என்று முடிவெடுத்தனர்.

ஆனால் மார்ச் கடைசியில் வெளியிட திட்டமிட்டனர், ஆனால் கமலின் உத்தமவில்லன், கொம்பன் போன்ற படங்கள் வெளிவரயிருப்பதால் இப்போது மே 1-ந்தேதியில் இடம்பொருள் ஏவல் படத்தை வெளியிட முடிவு செய்திருக்கிறார்கள்.

அதேபோல், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ்துக்கே தனது இந்தியா பாகிஸ்தான் படத்தை வெளியிடப்போவதாக அறிவித்திருந்தார் விஜய் ஆண்டனி. ஆனால், அப்போது ஏற்பட்ட தியேட்டர் பிரச்சினையால் ஜனவரியில் வெளியிடயிருந்தார்.

அந்த படத்தின் பாடல்களைகூட சேனல்களில் வெளியிட்டு பப்ளிசிட்டி செய்தார். ஆனால், அப்போது சரியான தியேட்டர்கள் கிடைக்காததால், பிப்ரவரி, மார்ச் என்று இழுத்தடித்துக்கொண்டே வந்த விஜய் ஆண்டனி, இப்போது மே மாதம் எப்படியும் இந்தியா பாகிஸ்தானை வெளியிட்டாக வேண்டும்  என்ற முடிவில் இருக்கிறார். அதனால், மல்டி ப்ளக்ஸ் தியேட்டர்களாக கைப்பற்றும் முயற்சியில் தற்போது அவர் இறங்கியிருக்கிறார்.


Post your comment





Related News
"எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்" படத்தை பார்த்து வியந்து மொத்தமாக வாங்கிய கிளாப் போர்டு வி.சத்யமூர்த்தி..
இந்திய படங்களில் பாகிஸ்தான் நடிகர்கள் நடிக்க தடை: இந்திய தயாரிப்பாளர் சங்கம் தீர்மானம்
விரைவில் வெளியாகும் இடம் பொருள் ஏவல்!
விஜய்சேதுபதி பேசாத பாத்திரம்!
இன்னும் சில வாரங்களில் இடம்பொருள் ஏவல்
இடம்பொருள் ஏவலைத் தொடர்ந்து ஆரஞ்சு மிட்டாய்!
இன்னும் சில வாரத்தில்... இடம் பொருள் ஏவல்.!
\'இந்தியா பாகிஸ்தான்\' முதல் நாள் ஸ்கோர் எவ்வளவு ?
76 நாட்களில்... 6.5 கோடி பட்ஜெட்டில்... இடம் பொருள் ஏவல்!
எனது படிப்பும் நடிப்பும் இருக்கும் \'இந்தியா பாகிஸ்தான்\' – சுஷ்மா ராஜ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions