76 நாட்களில்... 6.5 கோடி பட்ஜெட்டில்... இடம் பொருள் ஏவல்!

Bookmark and Share

76 நாட்களில்... 6.5 கோடி பட்ஜெட்டில்... இடம் பொருள் ஏவல்!

திருப்பதி பிரதர்ஸ் தயாரிப்பில் உத்தமவில்லன் படம் பல தடைகளைக் கடந்து இன்று திரைக்கு வந்துவிட்டது. இந்நிறுவனத்தின் அடுத்த வெளியீடாக இடம் பொருள் ஏவல் படம் வெளிவர உள்ளது.

தென் மேற்கு பருவக்காற்று, நீர்ப்பறவை படங்களைத் தொடர்ந்து சீனு ராமசாமி இயக்கி உள்ள இந்தப் படம் மலைக்கிராம மக்களின் வாழ்வியலைப் பற்றி பேசுகிறது.

விஜய்சேதுபதி, விஷ்ணு இருவரும் கதாநாயகர்களாக நடித்துள்ள இடம்பொருள் ஏவல் படத்தில் விஜய் சேதுபதியின் கேரக்டர், படம் வெளி வந்த பிறகு பரபரப்பாக பேசப்படும் என்று சொல்லப்படுகிறது.

இடம் பொருள் ஏவல் படத்தின் கதையைக் கேட்டதும் மொத்தமாக 50 நாட்கள் கால்ஷீட்டைக் கொடுத்திருக்கிறாராம். அது மட்டுமல்ல, தான் நடிக்காத நாட்களிலும் கூட படப்பிடிப்பு நடக்கும் இடங்களிலேயே அருகில் இருந்திருக்கிறார்.

6.5 கோடி பட்ஜெட்டில், 80 நாட்களில் படப்பிடிப்பை முடித்துத் தருவதாகச் சொன்ன சீனு ராமசாமி, 76 நாட்களிலேயே படப்பிடிப்பை முடித்துக் கொடுத்திருக்கிறாராம். விஜய் சேதுபதிக்கு மட்டுமல்ல விஷ்ணுவுக்கும் இடம் பொருள் ஏவல் மிகப்பெரிய பிரேக்கைக் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 


Post your comment





Related News
கஜா புயல் பாதிப்பு - நடிகர் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் உதவி
சம்பள பாக்கி விவகாரம் : விஜய் சேதுபதி படத்தை விஷால் தடுத்தாரா?
விஜய் சேதுபதியின் அடுத்த லெவலுக்கான கதையை உருவாக்குவேன் - இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரன்
96 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
வட சென்னை கதையில் விஜய்சேதுபதி
அடுத்த கட்டத்திற்கு முன்னேறிய சூப்பர் டீலக்ஸ்
கேரள மக்களுக்கு தனுஷ்-விஜய் சேதுபதி கொடுத்த நிதி உதவி..!
"எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்" படத்தை பார்த்து வியந்து மொத்தமாக வாங்கிய கிளாப் போர்டு வி.சத்யமூர்த்தி..
சீதக்காதி, கலைக்கு முடிவே இல்லை என்பதை உணர்த்தும் படம் - விஜய் சேதுபதி..!
ரஜினியின் ஷூட்டிங் அடுத்து இங்குதான்! புதிய தகவல்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions