விரைவில் வெளியாகும் இடம் பொருள் ஏவல்!

Bookmark and Share

விரைவில் வெளியாகும் இடம் பொருள் ஏவல்!

அஞ்சான், உத்தமவில்லன் படங்களை தயாரித்தபோது டைரக்டர் லிங்குசாமியின் திருப்பதி பிலிம்ஸ் நிறுவனம் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்தது. அவர்கள் தயாரித்து வெளியிட்ட பல படங்கள் ஹிட்டடித்து வந்தன. ஆனால், சூர்யாவை வைத்து லிங்குசாமி இயக்கிய அஞ்சான் படம் அதிர்ச்சி தோல்வியாக அமைந்தது.

அதையடுத்து அவரது நிறுவனத்துக்காக நடிகர் ரமேஷ்அரவிந்த் இயக்கத்தில் கமல் நடித்து வெளியான உத்தமவில்லன் படமும் தோல்வியை கொடுத்ததால் லிங்குசாமி அதன்பிறகு தயாரித்துக்கொண்டிருந்த ரஜினிமுருகன், இடம்பொருள் ஏவல் ஆகிய படங்கள் திரைக்கு வருவதில் சிக்கல்கள் ஏற்பட்டது.அதனால் அந்த இரண்டு படங்களுமே பல மாதங்களாக ரிலீசாகாமல் தேங்கிக்கிடந்தன. ஒருவழியாக சிவகார்த்திகேயனின் ரஜினிமுருகன் இன்று ரிலீசாகி உள்ளது.

இந்நிலையில், இன்னொரு படமான இடம் பொருள் ஏவல் படத்தையும் உடனடியாக வெளியிடும் வேலைகள் நடக்கிறதாம். இதுகுறித்து விசாரித்தபோது, சீனுராமசாமி இயக்கத்தில் விஜயசேதுபதி-விஷ்ணு இணைந்து நடித்துள்ள இடம் பொருள் ஏவல் படம் பிப்ரவரியில் திரைக்கு வருவது உறுதியாகி விட்டது என்கிறார்கள்.

ஏற்கனவே செளகார்பேட்டை உள்ளிட்ட சில படங்கள் அடுத்த மாதம் திரைக்கு வரயிருப்பதால் மல்டி பிளக்ஸ் தியேட்டர்களை கைப்பற்றும் வேலைகளும் நடக்கிறதாம்.


Post your comment





Related News
"எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்" படத்தை பார்த்து வியந்து மொத்தமாக வாங்கிய கிளாப் போர்டு வி.சத்யமூர்த்தி..
விஜய்சேதுபதி பேசாத பாத்திரம்!
இன்னும் சில வாரங்களில் இடம்பொருள் ஏவல்
இடம்பொருள் ஏவலைத் தொடர்ந்து ஆரஞ்சு மிட்டாய்!
இன்னும் சில வாரத்தில்... இடம் பொருள் ஏவல்.!
76 நாட்களில்... 6.5 கோடி பட்ஜெட்டில்... இடம் பொருள் ஏவல்!
இடம் பொருள் ஏவல் படத்தின் டிரைலர் ஏப்ரல் 23ம் தேதி வெளியீடு
மே மாதத்துக்கு சென்ற இடம் பொருள் ஏவல், இந்தியா பாகிஸ்தான்!
இடம் பொருள் ஏவல் படத்தில் பொட்டு சுரேஷ்!?
தொடங்கியது இடம் பொருள் ஏவலின் டப்பிங் பணிகள்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions