இன்னும் சில வாரங்களில் இடம்பொருள் ஏவல்

Bookmark and Share

இன்னும் சில வாரங்களில் இடம்பொருள் ஏவல்

தென்மேற்கு பருவக்காற்று, நீர்ப்பறவை ஆகிய படங்களை இயக்கிய சீனுராமசாமி இயக்கியுள்ள படம் இடம் பொருள் ஏவல்.

லிங்குசாமியில் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் விஷ்ணு இரண்டாவது ஹீரோவாக நடிக்கிறார். நந்திதா, ஐஸ்வர்யா ராஜேஷ் இருவரும் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.

தொடர்ந்து வித்தியாசமான கதைகளை இயக்கி வரும் சீனுராமசாமி இந்தப்படத்திலும் மாறுபட்ட ஒரு கதையை கையில் எடுத்திருக்கிறார். மலைக்கிராமத்தை கதைக்களமாக வைத்து முக்கியமான ஒரு சமூகப்பிரச்சனையை மக்கள் மன்றத்துக்கு எடுத்து வருகிறார்.

சில தினங்களுக்கு முன் சென்சாருக்கு சென்றது இடம் பொருள் ஏவல். படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகளுக்கு படம் மிகவும் பிடித்து விட்டதாம். அதோடு, இடம் பொருள் ஏவல் படத்திற்கு அனைவரும் பார்க்க கூடிய யு சர்ட்டிஃபிகேட் வழங்கியிருக்கிறார்கள்.

இடம் பொருள் ஏவல் படத்துக்கு யு சான்றிதழ் கிடைத்ததும் உற்சாகமடைந்துள்ள லிங்குசாமி படத்தை வெளியிடும் வேலையை துரிதப்படுத்தி உள்ளார். இன்னும் சில வாரங்களில் இடம்பொருள் ஏவல் திரைக்கு வரும் என்கிறார்கள்.


Post your comment





Related News
"எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்" படத்தை பார்த்து வியந்து மொத்தமாக வாங்கிய கிளாப் போர்டு வி.சத்யமூர்த்தி..
விரைவில் வெளியாகும் இடம் பொருள் ஏவல்!
விஜய்சேதுபதி பேசாத பாத்திரம்!
இடம்பொருள் ஏவலைத் தொடர்ந்து ஆரஞ்சு மிட்டாய்!
இன்னும் சில வாரத்தில்... இடம் பொருள் ஏவல்.!
76 நாட்களில்... 6.5 கோடி பட்ஜெட்டில்... இடம் பொருள் ஏவல்!
இடம் பொருள் ஏவல் படத்தின் டிரைலர் ஏப்ரல் 23ம் தேதி வெளியீடு
மே மாதத்துக்கு சென்ற இடம் பொருள் ஏவல், இந்தியா பாகிஸ்தான்!
இடம் பொருள் ஏவல் படத்தில் பொட்டு சுரேஷ்!?
தொடங்கியது இடம் பொருள் ஏவலின் டப்பிங் பணிகள்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions